பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,648 கம்பன் கலை நிலை அவ் வுண்மையை யாண்டும் கூர்மையாய் அறிந்து வருகிருேம். பெரியவன்பால் பேருரிமையாளன் என்று பின்பு தெரிந்து கொண்டமையால் பதனிடம் என்பும் உருகும் அன்புரிமை பூண்டு பிறவிப் பாசத்தோடு இவன் பெருகி வந்தான். அவ்வா வில் அவனுடைய வீரப்பிரதாபங்களைக் குறித்து இங்கே இத் தீரன் இவ்வாறு செவ்வையாக நேரே பேச நேர்ந்தான். இந்திரசித்து அயோத்தி சென்ருல் அவன் பொன்றி வீழ் வது உறுதி, பரதன் அக் கொடியவனே அடியோடு அழித்து ஒழித்தே விடுவான்: யாதும் கவலையுற வேண்டாம் என்று இராமனுக்கு ஆறுதல் கூறி இளையவன் உரிமையோடு ஊக்கி கின்ருன். தனது குடியில் பிறந்தவர் அதிசய வீரர்; எவரையும் எளிதே வெல்ல வல்லவர்; அவரை யாராலும் யாதும் செய்ய முடியாது என இலக்குவன் உள்ளம் துணிந்து உறுதி பூண்டு இருப்பது உரைகளால் ஈண்டு நன்கு உணர வந்தது. அனுமான் ஆற்றியது. இன்னவாறு இளையவன் மூத்தவனைத் தேற்றி கிற்குங்கால் அனுமான் பணிந்து ஆண்டவா என்மேல் ஏறி யிருங்கள்; அதி விரைவில் அயோத்திக்குக் கொண்டுபோப் விடுகிறேன் என்று போற்றி வேண்டினன். அவன் கூறியன விரிய ஒளிகளாயின. அக்கணத்து அனுமன் கின்றன் ஐய!என் தோளிளுதல் கைத்துணேத் தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ இக்கணத்து அயோத்தி மூதூர் எய்துவேன் இடமுண்டென்னின் திக்கனத் தினிலும் செல்வேன் யானேபோய்ப் பகையும் தீர்ப்பேன். எழுபது வெள்ளத் தோடும் இலங்கையை இடங்து என் கோள் மேல் தழுவுற வைத்தின் றேகென் றுரைத்தியேல் சமைவென் தக்கோய்! பொழுதிறை தாழ்ப்பது என்னே புட்பகம் போதல் முன்னம் குழுவொடும் கொண்டு போவேன் கணக்தொடு குதிப்பேன் கூற்றின். கொல்ல வந்தானே நீதி கூறினேன் விலக்கிக் கொள்வான் சொல்லவும் சொல்லி கின்றேன் கொன்ற பின் துன்பம் என்ன வெல்லவும் தரையில் வீழ்வுற்றுணர்ந்திலென் விரைந்து போனுன் இல்லையென்று உளனேல் தியோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றன். மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழிய தாக கினேப்பின் முன் அயோத்தி எய்தி வருநெறி பார்த்து கிற்பேன்