பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 4649 இனிச்சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் புனத்துழாய் மாலே மார்பீர்! புட்பகம் போதல் முன்னம் (4) அனுமான் ஆர்வத்தோடு விரைந்து வேண்டியிருக்கும் நிலைகளை இவை வரைந்து காட்டியுள்ளன. அம்புத ஊக்கமும் அதிசய ஆற்றலும் உரைகளில் ஒளிவீசி நிற்கின்றன. அயோத்திக்கு வேகமாய்ப் போக வேண்டுமே என்று இராமபிரான் துடித்து நிற்கும்போது மாருதி இவ்வாறு அடுத்து வந்து உரிமையாய் உறுதி கூறியிருக்கிருன். எம்பெருமானே! தம்பியோடு நீங்கள் என் தோளில் விரைந்து எறியருளுங்கள்; ஒருகண நேரத்துள் திருவயோத்தி நகரை நேரே காணலாம்; எல்லாருமே சேர்ந்து செல்லவேண்டும் என்று சொல்லினும் அவ்வாறே ஒல்லையில் செய்கிறேன்; எழுபது வெள்ளம் சேனைகளோடு இந்த இலங் கைமண்டலம் முழுவதும் ஒருங்கே பெயர்த்து எடுத்துக்கொண்டு போகும்படி பணித்தாலும் கணத்தில் புரிகின்றேன். இங்கே நேர்க்க கேட்டுக்கு நானே காரணன் ஆதலால் காரியத்தைப் பூரணமாச் செய்ய வேண்டியது எனது கடமையாய் மூண்டுள் ளது. பிராட்டி இறந்து பட்டது என் மடமையாலேயாம்; அக் தப் பாதகன் கொல்ல மூண்டபோது ஒல்லையில் பாய்ந்து அவ னைக் கொன்று தொலைக்காமல் இத வசனங்கள் பேசி நயத்து வேண்டி நின்றதால் நாசம் நேர்ந்துவிட்டது; கொலை நேரவே என் குலே துடித்து கிலே மயங்கிக் கீழே வீழ்ந்துவிட்டேன்; அவன் வேகமாய் மேலே தாவிப் போயினன், துயரால் மயங்கி நான் கீழே விழாதிருந்தால் அத்தீயவன் உயிரோடு இயங்கி மேலே போயிருக்க முடியாது; காரியம் முடிந்துபோன பின் வீரியம் பேசுவது வீண், இனிமேல் ஆகவேண்டியதை வேக மாய்க் கவனிக்க வேண்டும்; எல்லாரும் ஒல்லையில் என்மேல் ஏறிக்கொள்ளுங்கள்; வான வீதியில் அவன் போன வழியே கான் விரைந்து போவேன்; அந்த விமானத்திற்கு முக்தி விடு வேன்; எந்த வகையிலும் பிந்தி கில்லேன்; முன்னதாய் விரைந்து போப் நானே அவனைச் சின்னபின்னம் செய்து சிதைத்து வீழ்த் துவேன்; இங்கே காலத்தைக் கடத்தி கில்லாமல் கருணை செய்து உடனே எழுந்தருளுங்கள்' என்று இரு கைகளையும் நேரே வந்தி எதிரே கின்று இராமநாதன அனுமான் வேண்டி கின்ருன். "னைப்பின் முன் அயோத்தி எய்தி நெறிபார்த்து கிற்பேன். 482 m o