பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,650 கம்பன் கலை நிலை அனுமான் குறிபார்த்து உரைத்திருக்கும் குறிப்பை இதல்ை கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். வீரவேகமும் விசய விவேகமும் இவனுடைய மொழிகளில் ஒளி வீசி யுள்ளதை அறிவுலகம் தெளிவோடு உணர்ந்து பெரு மகிழ்வடைந்து வியந்துவருகிறது. நினைவதன் முன்பு செல்லும் மானத்தில் மேகநாதன் வேக மாய்ப் போயுள்ளானே, தீவினையைவிரைந்துசெய்து விடுவானே! என்று இராமநாதன் முன்பு பரதவித்து கின்ருன் ஆதலால் அங் தப் புனித உள்ளம் இனிது தேற நினைப்பின் முன் அயோத்தியை அடைவேன் என்று வீர மாருதி திரமாப் விளம்பி யருளினன். இங்கே காலத்தைக் கடத்தி கின்ருல் விமானத்தில் போன வன் அங்கே கொடிய கேடுகளைச் செய்து விடுவான்; விரைந்து எறுங்கள் என்று மாருதி பரிந்து வேண்டவே இராமனும் இலக் குவனும் அந்த வீரத்தோளில் ரேமாய் ஏற நேர்ந்தார்; அது பொழுது விபீடணன் எதோ கனவு கண்டவன்போல் நினைவு தோன்றி இராமனை நேரே தடுத்துத் தன் கருத்தை உரைத்தான். வீடணன் குறித்தது. ஐயனே! என் உள்ளத்தில் ஒர் ஐயம் தோன்றுகிறது; அந்த வெய்யவன் ஏதோ மாய வஞ்சமான சதி புரிந்துள்ளான் என்று கருதுகிறேன். பிராட்டியை அவன் வெட்டியிருக்க முடி யாது; கிட்ட நெருங்கினல் நெருப்பை அணுகிய சருகுபோல் நிலை குலைந்து அழிந்து போயிருப்பான்; உலகங்களும் நாசமடைந்திருக்கும்; அவ்வாறு அழிவுகள் கோமையால் அம்மை சுகமாயிருக்கிருள் என்று நான் தெளிவாக நம்புகின்றேன்; நேரே அசோக வனத்துக்குப் போய் நான் பார்த்து வருகி றேன்; அதுவரையும் இங்கே பொறுத்திருங்கள்; அதன் பின் ஆகவேண்டியதை வேகமாய்ச் செய்வோம் என வீடணன் பணிவோடு வேண்டி நின்றன். போக மூண்ட இராமன் அந்த வேண்டுகோளை அறிந்ததும் ஏகாமல் நின்றன். யூகவிவேகமாய்ச் சமையத்தில் கூறிய விபீடணனுடைய உணர் வுறுதிகளை ஒர்க் து இளையவனும் அனுமானும் உளம் உவந்து தெளிவமைக்து கின்ருர், புத்தி யூகம். பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்த போது முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியு மன்றே