பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4652 கம்பன் கலை நில உளம் உவந்தது. என்றலும் உலகம் ஏழும் ஏழுமாத் தீவும் எல்லை ஒன்றிய கடல்கள் எழும் ஒருங்கெழுந் தார்க்கும் ஒதை அன்றென ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்துக் குன்றினம் இடியத் துள்ளி ஆடின குரக்கின் கூட்டம். (8) (மாயா சிதைப் படலம்) அயோத்திக்குப் போக மூண்ட இராமனைத் தடுத்து நிறுத்தி விபீடணன் வண்டு உருவங் கொண்டு அசோக வனத்துக்குப் போய்ச் சீதையைக் கண்டு உவகை மீக்கூர்ந்து மீண்டு வந்து கற்புத் தெய்வம் அற்புத நிலையில் உள்ளாள் என்று உண்மையை உரைக்கவே ஆண்டு கின்ற வானா வீரர்கள் யாவரும் ஆனந்த பரவசத்தால் உள்ளம் களித்துத் துள்ளிக் குதித்து ஆர வாரங் களை விளைத்து அடலாண்மைகளோடு ஆடலாயினர். அந்தக் கூத்தாட்டம் அவர் அடைந்த மகிழ்ச்சி நிலையை வார்த்துக் காட்டியுள்ளது. சீதையைப் பார்த்து வந்தவனுடைய வாயி லிருந்து வந்த வார்க்கை இராம லட்சுமணருக்கு உயிரை வார்க் துத் தந்து அதிசய ஆனந்தத்தை ஊட்டி எல்லாருக்கும் பேரின் பங்களை நீட்டி நின்றது. நீட்டவே அக் கூட்டம் கூத்தாடியது. அந்த மதியூகி சென்றதும் கண்டதும் தெரிந்து கொண்ட தும் மீண்டு வந்து ஆண்டவனிடம் சொன்னதும் அதிவேகமாய் கடந்தன. கண்ட காட்சிகளை விண்டு விளக்கவே வியப்புகள் விளைந்தன. அதிசய மகிழ்ச்சிகள் யாண்டும் நீண்டன. வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தில் போனன். விபீடணன் அசோக வனத்துக்குப் போன நிலையை இது காட் டியுள்ளத. சீதையைக் கண்டுவர நேர்ந்தவன் வண்டு வடிவம் கொண்டு வான விதியில் பறந்து சென்றிருக்கிருன். இலங்கை வேந்தன் சினந்து சீறி இகழ்ந்து நீக்கியதால் எதிரியோடு சேர்ந்து பகைவனப் மாறியுள்ளான்; அவ்வாறு விலக்காய் வேறுபட்டுள்ள விபீடணன் வெளிப்படையாய் இலங்கைக்குள் துழைய முடியாது ஆதலால் கரவாய் நுழைந்து செல்லவல்ல உருவை விரைவாய் விழைந்துகொண்டான். யாரும் அறியாத படி போய்க் காரியத்தை முடித்து வர விரியமாய் மூண்டிருப்