பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4653 பது வித்தக வியப்பாய் நீண்டு கின்றது. கருதியபடி எந்த உரு வத்தையும் மருவிக்கொள்ள வல்லவன் என்பதை வீடணன் இங்கே விளக்கியுள்ளான். மாய விஞ்சைகள் கிருதரிடம் இயல் பாகவே மருவியிருத்தலால் அந்த மரபில் வந்த இவன் வண்டு வடிவம் கொண்டு சானகியைக் கண்டுவரப் போனன். வேறு எவ்வகை உருவினும் வண்டு வடிவமே இங்கு மிகவும் உரிமை யாய் நின்றது. அசோக வனத்து மலர்களில் மருவியுள்ள தேனே உண்டு வர வான வீதியில் வண்டுகள் பல பறந்து வரும் ஆக லால் அந்த வரவில் இவன் சிங்தை தணிந்து போனன். சிறந்த மாயாவிகள் ஆன அரக்கர் எவரும் அறிந்துகொள்ள முடியாத படி இந்த யூகி ககன மார்க்கமாய்க் கரந்து சென்றுள்ளான். இவன் போன போக்குக்கு உவமை கூறியிருப்பது உவகை சுரந்துள்ளது. உரிய நீர்மைகள் ஒளி புரிந்து மிளிர்கின்றன. மானவன் மனத்தில் போனன் என்றது வண்டு வடிவம் கொண்டு சானகியைக் காணப் போனவனது வேகத்தையும் தாகத்தையும் யூகித்து உணர வந்தது. இந்த ஒப்பு செப்பமும் நுட்பமும் ஒட்பமும் உடையதாய் நிலைகளைத் தெரிய விளக்கியது. இராமனது உள்ளம் போனதுபோல் வான வீதியில் துள் ளிப் போயிருக்கிருன். இந்த விர வள்ளலுடைய மனம் சானகி யைக் குறித்து அதுபொழுத இருக்க நிலை அவலப் பதைப்பா ப் நின்றது. இறந்து போனுள் என்று பரிந்து பதைத்தவன் உயி ரோடு இருக்கிருளா? என்று ஐயம் தோன்றிக் காண விரைக் தால் அந்தக் காட்சியில் கதுவிய வேகமும் ஆவலும் எவ்வளவு நிலையில் ஓங்கியிருக்கும் என்பதை யூகத்தாலும் யாரும் உணர்ந்து கொள்ள முடியாது. அவல மறுக்கமான கவலையோடு தனது அருமை மனைவியைக் காண விரைந்து இராமன் மனம் வாவிப் போனது போல் அவன் அங்கே தாவிப் போனன். வண்டும் மனமும் ஒருங்கே.கண்டுஈண்டு ஊன்றி ஒர்ந்து கொள்ளவந்தன. போனவன் அரக்கன் ஆயினும் இராமனுடைய உள்ளம் போல் புனிதமும் நீதியும் புண்ணியமும் கண்ணியமும் பொருங் தியுள்ளவன்; இக் கோமகன் எண்ணியபடியே எகையும் உரி மையோடு செய்து முடிப்பவன்; எவ்வழியும் செவ்விய அன்பு