பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4654 கம்பன் கலை நிலை தோய்ந்த திவ்விய கீர்மையன், சிறந்த சீர்மையன் என்னும் உண்மைகள் நுண்மையாய் ஈண்டு உணர வந்தன. இராமனை இங்கே மானவன் என்று குறித்தருளினர். மான வீரங்கள் தோய்ந்து மனித வுருவில் மருவியுள்ள தெய்வீக நிலை யினன் என்பது தெரிய. மானிட மரபுக்கு மகிமை தர வந்த பெரியவன் என வானவரும் வணங்கி வர இம்மானவன் வங் துள்ள உண்மை இங்கே நன்கு சிங்தை தெளிய வந்தது. இந்த உத்தமனின் தேவியைக் கண்டதும் வீடணன் உள் ளம் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி எழுந்தது; துயரமான உயிர் வேதனைக ளெல்லாம் அடியோடு நீங்கி ஆண்டவன் பெரு மகிழ்ச்சி அடைவான் என்று நீண்ட களிப்பு கெஞ்சில் நெடிது ஓங்கி நின்றது. யாவரும் இன்புற அன்பு பெருகி வந்தது. ஆவலோடு வேகமாய்ப் பறந்து போய்ச் சீதையை அவன் பார்த்த போது அப் பெண்ணரசி இருந்த நிலையை எண்ணி எண்ணி வியந்தான். கண்ணிர் மல்கிக் கனிந்து மகிழ்ந்தான். ஆவி உண்டு இலை என்னச் செய்த ஒவியம். சீதையை இவ்வாறு ஒவியமாக் கவி செவ்வையாக எழுதிக் காட்டியிருக்கிருர். காவியச் சுவைகள் சொல்லிலும் பொருளி லும் சுரந்து திகழ்கின்றன. அழகுக் கலையில் கைதேர்ந்த ஒவியன் கருத்தால் திருத்தமாகச் செய்தருளிய ஒவியம் எனக் விேயமாய்ச் சிறந்து தேவியல்போடு தேவி விளங்கிளுள். அதிசய அழகும் பதிபிரிந்த துன்பமும் ஒருங்கே மருவிச் சித்திரப் பதுமைபோல் யாதும் அசையாமல் விழித்த கண் விழித்தபடியே அவ் வுத்தமி அசோக வனத்தில் இருந்துள்ள நிலையைத் தெரிந்து கொள்ளவே வீடணன் ஆனந்த பரவசனப் அயர்ந்து நின்ருன். பின்பு நிலைமைகளே கினைந்து ஆராய்ந்தான். தேவியைக் கொன்றதாகப் பாவி பாவனை செய்து காட்டி யிருக்கும் காரணத்தைக் கருதி யுளைக்கான்; மருவியுள்ள மருமங் களைப் பூரணமாத் தெரிய விழைந்தான். இலங்கையிலிருந்து நிகும்பலையை நோக்கி அரக்கர்கள் வேள்விக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொண்டு மருமமாச் செல்வதைக் கண் டான். மேகநாதன் அங்கே மாயவஞ்சமாய்ச் செய்கிற யாகக்