பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4656 கம்பன் கலை நிலை நீ உண்டு; தெய்வம் உண்டு; மாருதி உண்டு: தவம் உண்டு; மறையும் உண்டு. -- சீதை சுகமா யிருக்கிருள் என்று வீடணன் சொன்ன பொழுது இராமன் உள்ளம் மகிழ்ந்து இவ்வாறு கூறி யிருக்கி முன். மனைவி இறந்தாள் என்று மறுகி அழுதவன் அவள் இருந் தாள் என்று தெரிந்ததும் எண்ணி மகிழ்ந்து மொழிந்துள்ள உரைகள் நுண்ணிதாக உணர வுரியன. ஐந்து பாதுகாப்புகள் எந்த வேளையும் தனக்கு ஆதரவாப் கின்று யாண்டும் உரிமை யோடு தன்னைக் காத்து வருதலால் யாதொரு துன்பமும் கன்பால் அனுகாது என அன்பால் உருகி இவ் வீரன் உரை யாடி யிருக்கிருன். உத்தமன் உரைகள் உணர்வொளிகளை வீசின. நீ உண்டு என்று முதலில் விபீடணனைத் தலைமையாக் குறித் துள்ளான். அசோக வனத்துக்குப் போய் வந்து அதுபொழுது அவன் உதவியுள்ள நிலையை உள்ளம் உவந்துள்ளமையால் உரை முக்துறத் துள்ளி வந்தது. எல்லாம் உண்டு என்று இவன் உவந்து சொல்லும்படி அவன் உண்மையை உரைத்திருப்பது துண்மையா உணர வுரியது. இராமனுக்கு அருமைத் துணையா அமைந்துள்ள உண்மைப் பொருள்களுள் அனுமான ஈடு சாயக மாப் வைத்திருக்கிருன்; அந்த வைப்பு கெடிது சிந்திக்கத்தக்கது. நேர்ந்த துன்பங்களையெல்லாம் நீக்கித் தான் கினைத்தபடியே தனக்குக் காரிய சித்தியை அருள வல்ல சீரிய துணைகளை இவ் விர வள்ளல் ஈண்டு எண்ணி மகிழ்ந்துள்ளமை கண்ணிய நீர்மைகளைக் காட்டியுள்ளது. கொடிய அழிவுமூண்டதே என்.று நெடிய மருளாய் நிலைகுலைந்து மயங்கிய கோமகன் விடணன் உரையால் இருள் நீங்கி இன்பம் எ ப்தி நின்றமையால் பொருள் பொதிந்து மொழிகளை அருள் சுரந்து ஆர்வமாய் மொழிந்தான். மாய வஞ்சமாப் இந்திரசித்து செய்து போன தீய சதி யால் நேர்ந்த திகில்கள் இத் தூயவன் முதல் யாவரையும் இங்கே கலக்கி விட்டன. காவியத்தில் இது ஒரு பெரிய அபாய கிலையாய் மருவியுள்ளது. இராமன் இலக்குவன் அனுமான் முக லாக எல்லாரும் ஒருங்கே ஈண்டு அடைந்துள்ள அலமாலான கொடிய அவலத்துயரங்களை யாண்டும் இவர் அடைந்ததில்லை,