பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4657 யாவரும் குடிபெயர்ந்து நேரே அயோத்திக்குப் போக மூண்டு வேகமாய் எழுந்தபொழுது விபீடணன் தடுத்து நிறுத்தி அடுத்து விரைந்துஉண்மையை உணர்ந்து வந்து உறுதி கூறி உவகைகளே விளைத்திருப்பது அரிய பெரிய ஆதரவாய்ப் பெருகியுள்ளது. வேள்வி நிலையை விளக்கியது. பிராட்டி சுகமாயிருக்கிருள் என்று தெரிந்ததும் பேரின்ப நிலையில் யாவரும் பெருகி கின்றனர். அங்கனம் மகிழ்ந்து கிம் குங்கால் இராமனை வணங்கி மேகநாதன் புரியும் மாய வேள்வி யைக் குறித்து வீடணன் விளக்கி யுரைத்தான். ' எம்பெரு மானே தீய மாய வேலையை இந்திரசித்து மறைந்து செய்கி முன்; அம்மையைக் கொன்றுவிட்டு அயோத்திக்குப் போவதாகப் பாவனை காட்டியதெல்லாம் தான் கருதிய கருமத்தை விரைந்து செய்யவேயாம். இவ்வாறு மாய வஞ்சமா நம்மை மயங்கச் செய்து அத் தீயவன் நிகும்பலை என்னும் இடத்தில் யாகம் ஒன்று அதி வேகமாச் செய்துகொண்டிருக்கிருன். அது முடிக் கால் அவனை யாராலும் வெல்ல முடியாது; அது முடியுமுன் கடி து புகுந்து அவ் வேள்வியைக் குலைத்து அவனைத் தொலைத்து விட வேண்டும்; இளைய பெருமாளே என்னேடு அனுப்பியருளுங் கள்; விரைவில் சென்று அப் பாவியின் ஆவியை நீக்கி வருகி றேன்” என்று கெடிது பணிந்து கடிது விரைந்து கின்ருன். என்றலும் இறைஞ்சி யாகம் முற்றுமேல் யாரும் வெல்லார் வென்றியும் அரக்கர் மாடே விடையருள் இளவலோடும் சென்றவன் ஆவி யுண்டு வேள்வியும் சிதைப்பன் என்ருன் நன்றது புரிதிர்! என்ன நாயகன் நவில்வ தான்ை. சதிபுரிந்து கொண்டிருக்கும் பகைவனை அதி வேகமாச் சென்று கொல்லவேண்டும் என்று வீடணன் இவ்வாறு வேண்டியிருக்கி முன். உரிமையான உண்மையோடு வினை புரிய வேகித்து கின் முன்; அந் நிலைமையை உரைகள் வேகமா உணர்த்தியுள்ளன. கால தாமதம் செய்யலாகாது என்று கடிது விரைகின்ருன் ஆக லால் வேள்வியின் மூல நிலையை விளக்கி கின்ருன். யாகம் முற்றுமேல் யாரும் வெல்லார்: வென்றியும் அரக்கர் மாடே. 483