பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4658 கம்பன் கலை நிலை தந்திர யுத்திகளோடு மந்திர சித்திகளை மருவி இந்திரசித்து செய் கிற வேள்வி பூர்த்தியாகி விடுமானல் அவனை எவராலும் வெல் லமுடியாது; அவனே எல்லாரையும் கொன்று தொலைத்து வெற் றிபெற்று விடுவான் என விடணன் இங்கனம் குறித்திருத்த லால் அந்த யாகத்தின் அதிசய நிலையை மதியூகமாய் ஒர்க் து கொள்ளுகிருேம். சதியாலோசனைகளோடு அதி வேகமாய் அதனை அவன் ஆற்றி வருகிருன். தான் மாய வஞ்சமாய்ச் செய்கின்ற யாகத்துக்கு இடை யே எதிரிகள் இடையூறு செய்துவிட லாகாது என்று கருதியே முன்னே குறித்த தீய மாய வேலையைத் தற்காப்புக்காகத் துணிந்து செய்தான். சீதை இறந்தாள் என்று தெரிந்தால் எல் லாரும் கலங்கி நிற்பர்; விரைந்து அயோத்திக்குப் போக நேர்வர்; அதற்குள் யாகத்தை முடித்து விடலாம் என்றே நீண்ட ஆலோ சனையோடு மூண்டு செய்தான். அவன் செய்கிற மாயச்சதியை விபீடணன் நன்கு தெரிந்து கொண்டமையால் அதனை முடிய ஒட்டாதபடி கடித தொலைக்கவேண்டும் என்று இராமனிடம் விரைந்து பணிந்து வேண்டி நின்ருன். உரிமையான அன்போடு அவன் சொன்ன உண்மையை அறிந்ததும் இவ் வீரநாதன் தம்பியை விரைந்து போர்மேல் போக எவினன். இந்திரசித்து பல முறையும் அழி துயரங்களைச் செய்துள்ளமையால் அவனேடு இளையவனே இது பொழுது போருக்கு அனுப்ப நேர்ந்தவன் அரிய பல உறுதி நலங்களை உரி மையோடு உரைத்தான். அந்த உரைகள் உழுவலன்பு சுரங்து கரும நீதிகள் கிறைந்து உக்கிர விரங்கள் விரிந்து வந்தன. தம்பிக்கு நம்பி மொழிந்தது. தம்பியைத் தழுவி ஐயன் தாமரைத் தவிசின் மேலான் வெம்படை தொடுக்கு மாயின் விலக்குவான் பொருட்டால் அந்த அம்புங் அரப்பாய் அல்லே அனேயது துரந்த கால உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்ருன். முக்களுன் படையும் ஆழி முதலவன் படையும் முன்னின்று ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்ருல் ஒயத் தக்கவாறு இயற்றி மற்றுன் சிலைவலித் தருக்கி ளுலே புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய்! (2) !