பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4659 வல்லன மாயவிஞ்சை வகுத்தன அறிந்து மாளக் கல்லுதி தருமம் என்னும் கண்ணகன் கருத்தைக் கண்டு பல்பெரும் போரும் செய்து வருந்தலை அற்றம் பார்த்துக் கொல்லுதி அமரர் தங்கள் கூற்றினைக் கூற்றம் ஒப்பாய் (3) பதைத்தவன் வெம்மையாடிப் பல்பெரும் பகழி மாரி விதைத்தவன் விதையா கின்று விலக்கினும் மெலிவு மிக்கால் தைத்தவன் சிலையின் வாளி மருமத்தைக் கருதி ஒடி வதைத்தொழில் புரிதி சாப நூல்நெறி மறப்பி லாதாய்! (4) கொடுப்பதன் முன்னம் வாளி தொடுத்தவை துறைகள் தோறும் தடுப்பன தடுத்தி எண்ணிக் குறிப்பினல் உணர்ந்து தக்க கடுப்பினும் அளவிலாத கதியினும் கனகள் காற்றின் விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரைவிலாதாய்! (5) தனது அருமைக் கம்பியை இந்திரசித்தின் மீது போருக்கு அனுப்பும்போது இராமன் இவ்வாறு கூறியிருக்கிருன்; அரிய விர போதனைகளாய் உரைகள் பெருகி வந்துள்ளன. கொடிய ாயாவியான இந்திர சித்து கெடிய படை வலிகளும் உடையன் ஆதலால் அவைேடு போராடுங்கால் அதிசய சாதுரியமாப் அட லாண்மை புரிய வேண்டும் என்று கோதண்ட வீரன் குறிக் திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. 'தம்பி மூண்ட பகைவன் நமக்கு நீண்ட துயரங்களைச் செய்துள்ளான்; மாயச் சதிகள் புரிந்து தீய கேடுகளை விளைத்திருக்கிருன்; ஆதலால் அவன்மேல் உனக்குக் கடுங் கோபம் மூண்டிருக்கும்; எவ்வளவு கோபம் இருந்தாலும் நீதி தவறி நீ யாதும் செய்யலாகாது; யுத்த கருமத் தின்படி உத்தம நிலையில் நின்றே அவனை நீ கொன்று தொலைத்து வென்றி பெறவேண்டும்: சிவாஸ்திரம் முதலிய தெய்வப் பகழி களை முன்னதாக நீ எய்யவேண்டாம்; அவன் தொடுத்து விடும் அம்புகளைத் தடுத்து ஒழிக்கவே தக்க கஜனகளை மிக்க கிதானமா அடுத்து விடவேண்டும். பாசுபதம் முதலியன அதிசய ஆம் றல்களுடையன; மந்திர முறையோடு சிந்தனை செய்து விடின் ஊழித் தீயை ஏவியது போலாம்; எதிரியை அழிப்பதோடு கில் லாமல் அயலே உலகத்தையும் நாசப்படுத்த நேரும் ஆதலால் அவற்றை விடலாகாது; உனது சொந்த வில்லாண்மையாலேயே வந்த வகையிலும் அவனே வெல்ல வேண்டும். நீதி நெறியில் நிலைத்து நின்று உரிய வீரத்திறலால் நேரே போராடி வெல்வதே