பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4662 கம்பன் கலை நிலை பிரிவின் பரிவு. தான்பிரி கின்றிலாத தம்பி.வெங் கடுப்பிற் செல்லா ஊன்பிரி கின்றிலாத உயிர் என மறைத லோடும் வான்பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் தான்பிரிந்து ஏகக் கண்ட தயாதன் தன்னே ஒத்தான். (4) தம்பி சேனைகளோடு போர்மேல் சென்றதும் நம்பி பிரிந்து நின் றதும் அரிய பல நீர்மைகளை வெளி செய்திருக்கின்றன. அன்பு ஆண்மை உறுதி ஊக்கம் வீரம் முதலிய பண்பாடுகள் ஈண்டு வீறுகொண்டு விளங்கியுள்ளன. அரசகுலக் தோன்றல்களான இந்த விரக் குரிசில்களிடம் குடிகொண்டுள்ள விழுமிய பான் மைகள் உலக மக்களுக்கு என்றும் தலைமையான போதனைக ளாப் கிலவி அரிய பல சாதனைகளை அருளி நிற்கின்றன. போருக்குப் போக மூண்ட கம்பியை அண்ணன் ஆர்வத் தோடு அணைத்துத் தழுவியுள்ளது உள்ளே உறைந்துள்ள உழுவ லன்பின் அளவினை ஒரளவு வெளியே கெரிய விளக்கி கின்றது. ஆணி இவ் வுலகுக்கு ஆன ஆழியான். எனத் திருமாலையும் இராமனையும் ஒரு சேர உணருமாறு உரு வாகி வந்துள்ள இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. காக்கும் கடவுளாப் நின்று சகல சீவ கோடிகளையும் காக்கருளுகிற திரு மாலே இராமளுப்இங்கே காவலர் குடியில் தோன்றித் தேவரைக் காக்க சேர்ந்துள்ளான். மன்னர் குலமும் மனித இனமும் மகி மையுற இராமன் புனித மனிதனுப்ப் பொலிந்து விளங்கி அரிய வினைகளை ஆற்றி வருகிருன். மண்ணும் விண்ணும் தம் கண் எனக் கருதி இப் புண்ணிய வண்ணனே வாழ்த்தி வருகின்றன. சிறிய அச்சாணியால் பெரிய கேர் இயங்கி வருதல்போல் பசிய கோலத் திருமேனியன் ஆன இக்குல மகளுல் உலகம் இனிது நிலவி வருகிறது. அங் நிலைமையை நினைந்து தெளிய இவ் உலகுக்கு ஆணி என இக் கலைமகனை இங்கனம் வரைந்து கூறினர். உருவக மொழி உயர்ந்த ஒளி புரிந்துள்ளது. அரசர் குடியில் பிறந்த ஒரு மனிதன், கோசலை மகன்; என இன்னவாறு உருவம் முதலிய நிலைகளை நோக்கி இராமனே எளிதா எண்ணி விடலாகாது: அகில வுலகங்களுக்கும் இவன்