பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4663 ஆதரவாயுள்ளான்; அதிசய நிலையில் மருவியுள்ள அம்புக நிலையி னன் என்னும் உண்மை ஈண்டு துண்மையாய் உணர வந்தது. உலகம் உப்யத் தோன்றிய இவ் வுத்தமன் அவ் வுய்வின் காரியமான கலகம் ஒன்றைச் செய்யக் கம்பியை இங்கே எவி ன்ை. அந்த ஏவலில் பிறவிப் பாசமும் பேராண்மையும் பெருகித் தோன்றின. உரிய இருவரும் ஒருங்கே தெரிய வந்தனர். தாணுவின் தோற்றத் தானேத் தழுவினன். கழுவினவனது தலைமையை முன்னம் அறிக்கோம்; கழுவப்பட் டவனது நிலைமையை இதில் அறிகின்ருேம். இலக்குவன இவ் வா.) குறித்திருக்கிரு.ர். தானு=சிவபெருமான். என்றும் நித் தியமாய் நிலைத்திருப்பவன் என்னும் எதுவை விளக்கி இப் பெயர் வந்துள்ளது. இலக்குவனச் சிவன் என்று இங்கே குறித்தது உக்கிர வீர நிலையை உய்த்துணர்ந்துகொள்ள. ஊழிக் காலத்தில் உலகங்களையெல்லாம் ஒருங்கே அழித்து ஒழிக்க வல்ல சங்கார கருத்தாவைப்போல் அரக்கரை இவன் தொலைத்து ஒழிப்பான் என்னும் குறிப்பு கூர்ந்து நோக்க வந்தது. கூற்றுவனே உதைத்துக் காலகாலன் எனச் சிவபெருமான் விளங்கி நிற்றல்போல் அமரர் கூற்றுவகிைய இந்திரசித்தைக் கொன்று வென்றி பெறப் போகின்ருன் ஆதலால் இளைய பெரு மாள் இங்கே பெரிய சிவபெருமான் என நேர்ந்தான். திங்களின் மெளலி அண்ணல் திரிபுரம் தீக்கச்சீறிப் பொங்கினன் என்னத் தோன்றிப் பொலிந்தனன். திரிபுரத்தை எரித்த விரிசடைக் கடவுள்போல் அரக்கரை அழித்து ஒழிக்க இலக்குவன் சீறி எழுந்தான் என இது கூறியுள்ளது. போர்மேல் மூண்டு போகின்றவனுடைய அதிசய ஆற்றலை இவ்வாறு மதி தெளிய விளக்கி விதி நிலை துலக்கி யிருக்கிருர், தனது அருமைத் கம்பி உடை வரிந்து கட்டி மார்பில் கவ சம் புனைந்து முதுகில் அம்புப் புட்டில் தாங்கி வில் ஏந்தி விரக் கோலமாய்ச் செல்ல நேர்ந்ததைக் கண்டதும் இராமன் உள்ளம் உருகிஞன், கண்ணிர் மல்கிஒட ஒல்கி ஒசிந்து உளைந்து நின்ருன், கண்ணிர் நிலம்படர நெஞ்சு அழிவான்.