பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,664 கம்பன் கலை நிலை தம்பி போர்மேல் மூண்டு போக நேர்க்க போது அண்ணன் கண்ணிர் பெருகி நின்ற நிலையை இது காட்டியுள்ளது. இந்திர சித்தை வென்று வருக என்று சிக்கை துணிக் து சொன்னவன் இளையவன் போர்மேல் எழுந்தபொழுது உளம் உருகி அழு திருக்கிருன். அரிய வீரன் அழுதது பெரிய அதிசயமாயது. இருமுறை போய்ப் போராடி அழிதுயரடைந்துள்ளான்; இம்முறையும் போகின்ருன்; தன் பொருட்டுத் தம்பி படாத பாடு படுகின்ருனே! என்று இக் நம்பி நெஞ்சம் கரைந்து நின் முன்; அங்கிலையில் கண்ணிர் பெருகி வந்தது. போர் என்ருல் உவந்து துள்ளும் சிறந்த வீரக் குரிசில் தம்பி போர்மேல் எழுங் ததைக் கண்டதும் அழுதிருப்பது அதிசய வியப்பா யுள்ளது. எல்லே மீறிய உழுவலன்பால் உள்ளம் உருகியுள்ளமையால் கண் னிர் வெள்ளமாய்ப் பெருக நேர்ந்தது. பிறவிப் பாசமும் பெரிய ஆர்வமும் மானச மருமமும் ஈண்டு விரவி மிளிர்கின்றன. இவ்வாறு உருகி நின்றவனைத் தொழுது வணங்கி இளவல் போயினன். அந்தப் போக்கு அதிசய நோக்காய் விளங்கியது. வஞ்சன் மேலே சலங்கொண்டு சென்ருன் என்ற கல்ை இக் திர சித்தின்மீது இலக்குவனுக்கு மூண்டுள்ள கொதிப்பும் கோப மும் தெரிய வந்தன. கொடிய மாய வஞ்சனைகளைச் செய்து நெடிய திகில்களை விளைத்துச் சதியாய் மறைந்து அழிகேடுகளைப் புரிந்து கொண்டிருக்கின்ருன் ஆக்லால் அவனே விரைந்து அழித்து ஒழிக்கவேண்டும் என்னும் வெகுளி வீறுகொண்டு நின்றது. சேனைகளோடு அவனை நீறுசெய்து விடவேண்டும் என்று நீ.) பூசிய சிவன்போல் இவ்விரன் விருேடு போனன். தம்பி போர்மேல் போவதை இங்கம்பி பார்த்து கின்ருன். தலை மறையும் வரையும் நிலை பிரியாமல் கோக்கி கின்று கெஞ்சம் உருகினன். உயிர் உருக்கம் உரிமைப் பாசமாய் ஒளி புரிந்தது. - ஊன் பிரிகின்றிலாத உயிர். இராமனைப் பிரிந்து போகின்ற இளையவனே இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிருர். பிரிவு நிலை அரிய பரிவாய்ப் பெருகியுள்ளது. உடலை விட்டுப் பிரியாத உயிர்போல் இராமனை விட்டுப் பிரியாமல் என்றும் அருகே உரிமையாய் மருவி யிருந்தவன்