பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,667 குெம்பலை வேள்விமேல் அனுப்பியுள்ளான். அனுப்பிய வகையில் தந்தை என இந்த மைக்கன் இங்கே சிங்கை செய்ய நேர்ந்தான். அந்த வேள்வியை அளித்து அமரருக்கு அவன் அருள் புரிந்தான்; இந்த வேள்வியை அழித்து எல்லாருக்கும் இவன் இதம்புரியச் சென்ருன். செலவு நிலைகள் சிந்தனைக்கு வந்தன. சேனை சென்றது. வான சேனைகள் மான வீரங்களோடு நிகும்பலையை நோக்கி விரைந்து சென்றன. சேனைக் கலைவர்கள் எரி கொள்ளி களை எடுத்துக் கொண்டு உல்லாச விருேடு ஊக்கிப் போனர். அனுமானும் வீடணனும் அருகே மருவி வர இளைய பெருமாள் வில்ஏந்தி விரகம்பீரமாய் கடந்துபோனன். மருமமான பல இடர் களையும் கடந்து கருமமே கண்ணுப் விரைந்து போன படைகள் முடிவில் நிகும்பலையை அடைந்தன. பெரிய ஒரு கருமலை அயலே விரிந்து பரந்திருந்த அரக்கர் சேனைகள் யாண்டும் யாரும் புகாத படி நீண்ட சக்கர வியூகம் வகுத்து நிரை கிரையாய் கெடிது காத்து நின்றன. காப்புகள் எங்கும் கடுமையா யிருந்தன. நிகும்பலை நிலை. விரபத்திரகாளி என்னும் வன தேவதையின் அழகிய கோவில் அமைந்துள்ளது. அதன் எதிரே குளிர் பூஞ்சோலே ஒன்று எழில் மிகுந்திருக்கிறது; அந்த இனிய சோலையின் நடுவே ஒமகுண்டம் வகுத்து இராக்கத மந்திரவாதிகள் மந்திரங்கள் புரிய இந்திரசித்து அங்கே யாகத்தை அதிவேகமாய்ச் செய்து கொண்டிருக்கிருன். வெளியே நான்கு திசைகளில் நால்வகைப் படைகளும் கால் வகுத்து நின்று கடிது காத்து வருகின்றன. காப்பு முறை எவ்வழியும் கடுத்து ஊக்கிச் செவ்வையாய் நோக்கி நின்றது. தலைமைத்தளபதிகள் நிலைகள்தோறும் கெடிது திரிந்து யாண்டும் ஆவலான விழிப்போடு காவல் காத்து வந்தனர். அணிவகுப்புகள் அதிசயமாய் அமைந்து கின்றன. நேமிப்பெயர் யூகம் கிரைத்து நெடும் சேமத்தது நின்றது தீவினையோன் ஒமத்தனல் வெவ்வட வைக் குடனே பாமக்கடல் கின்றதொர் பான்மையதே. (1)