பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4669 அவர் நிறுத்தி யிருந்தனர். முதலில் ஒமகுண்டத்தைச் சுற்றி வரிசை வரிசையான சுழல் வட்டமாய்ப் படைகள் அடைவே நின்றன. நேமிப்பெயர் யூகம் என்றது சக்கராயுதம் வடிவமா வகுத்து நிறுத்திய சேனை அணியை. கேமி=சக்கரம். அதன் பின் உக்கிர விரமான போர் வீரர்களை நிறுத்தியிருந்தனர். அதற்கு அப்பால் தேர் வீரர்கள் சூழ்ந்து நின்றனர். அதற்கு அயலே யானைப்படைகள் கார்மேகங்கள் போல் கலித்து கின் றன. அந்த யானைச் சேனைகளுக்கு அயலே குதிரைப் படைகள் முதிர் வேகத்தோடு மூண்டு நின்றன. இந்த எல்லாப் படைக ளுக்கும் வெளியே காலாட் படைகள் வேல் வாள் வில் தண்டு பிண்டி பாலம் முதலிய மேலான ஆயுதங்களோடு வீறுகொண்டு நின்றன. வீரக் காப்புகள் யாண்டும் மருமமாய் நீண்டு நிலவின. எவ்வழியும் வெவ்விய திறல்களோடு வீறுகொண்டு நின்ற அந்தச் சேனைத் திரள்களை வானா சேனைகள் கண்டன. கிட்ட நெருங்கும் வரையும் கிருகர் சேனைகள் அங்கே மருவியிருக்கும் நிலை தெரியவில்லை. யாரும் யாதொரு அரவமும் இன்றி அமைதி யாப் அடங்கி யிருக்கமையால் அருகே அணுகிய பின்னரே படைகள் இருப்பது தெரிய வந்தது. தெரியவே வானா விரர்கள் ஆரவாரமாய் வீர கர்ச்சனைகளை விருேடு செய்தனர். வலியான இராகவன் வாய்மொழியால் சலியாத நெடுங்கடல் தான் எனலாய் ஒலியாதுறு சேனையை உற்றுஒருநாள் மெலியாதவர் ஆர்த்தனர் விண்கிழிய, யாதும் அசையாமல் எதும் பேசாமல் அலையில்லாத கெடிய கடல்போல் மருமமாய் மருவியிருந்த கிருதர் படைகளை நேரே காணவே வானா சேனைகள் ஆரவாரித்துப் போருக்கு மூண்ட நிலையை இது விளக்கியுள்ளது. எதிரியின் படைகளைக் கண்டதும் அண்ட கோளங்களும் செவிடுபடும்படி வானரங்கள் வீரமுழக் கம் செய்திருக்கின்றன. அவ் வுண்மையை விண்கிழிய ஆர்த் தனர் என்றகளுல் அறிந்துகொள்ளுகிருேம். தீயவன் புரிகிற மாயச் சதியைக் கண்டு கொண்டோம் என்ற களிப்பினல் அண்டமும் கிழிய ஆர்த்து கின்றனர். வீரச் செருக்கும் வெம் விக் களிப்பும் அந்த ஆரவாரங்களில் வீறுகொண்டு விளங்கின.