பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4672 கம்பன் கலை நிலை யழிக்கன, ஆரண முறைகளையும் மாரண நிலைகளையும் நன்கு தெரிந்திருக்க கிருதர் குல வேதியரும் நிலைகுலைந்து செத்தனர்; வேள்விக்கு உரிமையாக அமைத்திருந்த உபகரணங்கள் யாவும் ஒழிக்க குருக்களும் அழிந்து குண்டமும் இழிந்து படவே இக்கிரசித்து மறுக்கம் மீதுளர்ந்து மருண்டு திகைத்தான். ஒமவெங் கனல் அவிந்து உழைக் கலப்பையும் காமர்வண் தருப்பையும் பிறவும் கட்டற காமமந்திரத் தொழில் மறந்து கந்துறு அாமவெங் கனல் எனப் பொலிந்து தோன்றிஞன். (1) அக்கணத்து அடுகளத்து அப்பு மாரியால் உக்கவர் ஒழிதர உயிருளோரெலாம் தொக்கனர் அரக்கனேச் சூழ்ந்து சுற்றுறப் புக்கது கவிப்பெருஞ் சேனைப் போர்க்கடல். (2) ஆயிர மலருடை ஆழி மாப்படை ஏயெனும் அளவையின் இழிந்த என்பதும் அாயவன் சிலைவலித் தொழிலும் துன்பமும் மேயின வெகுளியும் கிளர வெம்பிஞன். (5) மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட முடிவிலா முரட் சேனேயும் பாழ்படச் சிறந்த மந்திரத்து எனேயும் பாழ்பட இனைய செப்பினன். (4) (கிகும்பலேப் படலம்) சேனைகளை அழித்து ஒழித்த இலக்குவன் வேள்விக் கலத்தை நெருங்கியதும், வானரங்கள் புகுந்ததும், ஒமகுண்டம் சிதைந்த தம், அது அழியவே இக்கிரசித்து உள்ளம் தளர்ந்து உருத்துக் கொதித்ததும் பிறவும் இங்கே நன்கு காண்கின்ருேம். வெளியே அணி அணியாய் ஆழிபோல் சூழ்ந்து கின்ற படைகள் எதிரிகளை எவ் வகையிலும் உள்ளே புகவிடா என்று உள்ளம் தணிக்க உறுதி பூண்டு மெளன விரதம் கொண்டு யாகத்தை அதி வேகமா மேகநாதன் செய்து வந்தான்; வந்தும் இளையவன் வில்லாடலால் அரக்கர் படைகள் எல்லாம் ஒல்லையில் அழிக்க ஒழிந்தன; வானா விரர்கள் உள்ளே புகுந்தனர்; புகவே உயிர் அழிக்கது என்று துயரோடு அவன் துடித்து வருக்கினன்.