பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4674 கம்பன் கலை நிலை கின்றன. வெள்ளமாய்த் திரண்டு உடன் வந்த பெரும் படை கள் அழிந்தன; வேள்வி பாழாயது; என் யாகம் அழிந்தபோதே நான் வெற்றி பெறும் யோகமும் ஒழிந்தது, அரக்கர் குலத்துக் குக் கொடிய அழிகேடு மூண்டுள்ளதை இந்த வேள்வியின் அழிவு விழிதெரிய விளக்கி நின்றது; ஆயினும் அழிவு நிலையை நினைந்து இனி மறுகி மயங்குவதால் பயன் இல்லை; கவலையால் கலங்கிச் செயலிழந்து கின்ருல் குல விரோதிகளான தேவர்கள் கூடி நகைப்பர்; பேடிகள்போல் அஞ்சி ஒடுங்கி நின்ற அவர் சில காலமாக மிஞ்சி நிமிர்ந்து நிற்கின்ருர், அமரர் உலகத்தைப் பாழாக்கி இந்திரனே வென்று தொலைத்த நான் இந்த மனிதரை ஒரு பொருளாக எண்ணி இனைவது ஈனமேயாம். எனது தோள் வலியால் பகைவரை அழித்து ஒழித்து வெற்றி நிலையை உல கம் முற்றும் அறிய ஒல்லையில் செய்வேன்' என இவ்வாறு உள் ளம் துணிந்து அவன் ஊக்கி எழுந்தான். அவனுடைய உறுதியும் ஊக்கமும் அரிய திறலுடையன. கருதிய கருமம் இழந்து அவ மானமாய் மறுகி யிருக்கிருன்; அந்த நிலையிலும் சிங்கையில் திரம் சீறி நிற்கிறது. வீரம் வீறிட்டு விளங்குகின்றது. \ தலைமையும் நிலைமையும். ங் இத்திரசித்து இலங்கைவேக்கன் தலைமகன்; இளைய சக்கர வர்த்தி; அரிய வில்லாளி; பெரிய போர் வீரன், அசகாய சூரன்; நேர்ந்த பகைவரை இருமுறை நிலைகுலையச் செய்தான்; சஞ்சீவி முதலிய தெய்விக உகவிகளால் தெவ்வர் உப்தி பெற்றெழுங் தனர்; மீண்டும் போருக்கு ஊக்கி விர வாதங்கள் கூறினர்; அந்த நிலைகளை அறிந்து இராவணன் சிங்கை வருந்தினன்; தந்தை யின் மன வேதனைகளை எந்த வகையிலாவது நீக்கி இதம் புரிய வேண்டும் என்று இம் மைக்கன் சிங்கை துணிந்தான்; மாயமான தீயசதி யோசனை புரிந்தான்: கருதியபடியே யாவும் செய்து முடித்து மருமமாய் மறைந்து போப் அதிசய வெற்றியை அருள வல்ல அரிய யாகத்தை விதிமுறையே செய்தான்; அது முடியாதபடி வீடணன் வேலை செய்தான்; உளவறிந்து வந்து இளவல் அளவில் ஆற்றலோடு அரக்கர் படைகளை அழித்து ஒழித்தான்; முடிவில் ஒம குண்டக்கையும் சிதைத்தான்; எல்லை மீறிய கொதிப்பும் கோபமும் உள்ளத்தில் ஏறி யிருக்காலும்