பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4678 கம்பன் கலை நிலை விரைந்து போர் புரியாமல் கீ மறைந்து மாயம் புரிவது மானங் கெட்ட செயலேயாம்; உன் கலையைத் துணித்துத் தரையில் வீழ்த்த விரைந்து வில்லும் கையுமாப் எம்பெருமான் தம்பி அதோ வந்து கிற்கின்ருர்; திரு நீலகண்டனை சிவபெருமானும், பாம்பனைப் பள்ளியான் ஆன திருமாலும் பிரமதேவனும் ஒருங்கு திரண்டு உனக்கு ஆதரவாய்த் துணை புரிய வந்தாலும் ே சாவது சரகம்; உன் கலை உருண்டு மண்ணில் விழ்வது உறுதி; நீ செத்து வீழ்வதைக் கண்டு மகிழத் தேவர்கள் எல்லாரும் வானத்தில் கூடி நிற்கின்றனர்; இளைய பெருமான் வில்லோடு வீரகம்பீரமாப் வீறுகொண்டு கிற்கின்ருர், விரைந்து எழுந்து வா; மறைந்து பதுங்காதே; நேரத்தைக் கடத்துவது உன் விரத்தைக் கெடுத்து மானத்தை விடுத்து மதிகெட்டபடியாம்; மானம் அழிந்து உயிர் வாழலாகாது; நீ நல்ல விரன் ஆனல் வில் எடுத்து ஒல்லையில் போராட வா; இல்லையேல் பேடி போல் இங்கிருந்து ஒடிப் போ; அப்படிப் போனலும் எப்படியும் ே உயிரோடு இனிமேல் வாழமுடியாது; முடிவு சேர்ந்துவிட்டது; விடிவு சேர்ந்தது; கடிது வா' என இன்னவாறு அனுமான் இந்திரசித்தை நோக்கி விருேடு விர வாதம் கூறியிருக்கிருன். உள்ளக் கொதிப்புகளும் எள்ளல் குறிப்புகளும் உரை களில் துள்ளி கிற்கின்றன. கான் உயிர் பதைத்துத் துடிக்கும்படி மாயசாலங்காட்டித் துயர் விளைத்துப் போனன் ஆதலால் அவன் மேல் இவனுக்கு ஆங்காரமும் கோபமும் அடல்கொண்டு ஓங்கி கின்றன. அந்த நிலையில் வார்த்தைகள் கடுமையாய் வந்தன. கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்! இந்திரசித்து சிங்தை நொந்து அடிக்குமபடி இப்படி கிங் தித்திருக்கிருன். வில் அம்புகளில் வல்ல அவன் இவன் சொல் அம்புகளால் அல்லல் அடைந்துள்ளான். வஞ்சம் இழிந்தவரிடம் இருப்பது; பொய் சேரிடம் நிற்பது. இந்த ஈன சேங்கள் அக்க மான வீரனிடம் மருவியுள்ளன என்றது அவனுக்குக் கொடிய அவமானமேயாம். பழி பாவங்களான இழி செயல்கள் அளவு கடந்து இருக்கின்றன என்பான் கோடி கோடி என்ருன். கெஞ்சம் எல்லாம் வஞ்சம்; வாய் எல்லாம் பொய்; செயல் எல்லாம் காவு என அவனுடைய இயல்புகளே இகழ்ந்து கின்றன்.