பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,680 കു பூகலம் மீதலம் பாதலம் என்னும் மூவகையான உலகங்களையும் காத்தருளவல்ல எம் பெருமான் கம்பி உன் உயிரை வாங்கி உடலைப் பருந்துகளுக்கு இரையிடுமாறு விரைந்து வந்து வில்லை வளைத்து நிற்கின்ருன்; நீ மறைந்து கொண்டு மதிகேடய்ைக் காலத்தைக் கழித்திருக்கின்ருப்! பேடித்தனமான இது மிகவும் பிழைபாடுடையது; சாக நேர்ந்துள்ள ஏ மேக நாதா! நீ செய்த யாகம் காசமாய் அழிந்து போயது; ஊரை கோக்கி ஒடிஒளிந்து போகாதே; உன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே; போரை கோக்கி நேரே எழுந்து வாl என்று மாருதி மொழிந்து .ே லும் இகழ்ந்தான். அவனது அழிவு நிலையை விழிகெரிய விளக்கினன். சாவது சாதம். நீ செத்து வீழ்வது சத்தியம்; வேளையைக் கடத்தாதே; வெளியே வந்து உன் அழிவை விழி எதிரே பார் என்று இவ் வாறு வி.டி கூறி விறலோடு விளித்தான். இந்திரசித்தை நோக்கி இப்படி விர கம்பீரமாய் நேரே பேசினவன் யார்? பேர் என்ன? தருமம் காப்பான். மருமமாய் மறைந்து வேள்வி புரிகிற மேகநாதனைப் போருக்கு வேகமாய் வெளி வரும்படி கூறிய கரும வீரனைக் கவி இவ்வாறு வாைந்து காட்டியிருக்கிருர். பாபிகளை ஒழித்துப் புண்ணிய நெறிகளைப் பூலோகத்தில் கிலே நிறுத்த வந்தவன் என அனுமானை இங்கே நன்கு அறிந்து கொள்ளுகிருேம். எதிரியைக் கொன்று தொலைக்க மூண்டுநேரே போருக்கு அழைத்தவனுக்கு இப்படி ஒரு பேரைக் கொடுத்துச் சீரைக் துலக்கியருளினர். தரும மூர்த்தியான இராமனுக்கு உரிமையாய் உடனிருந்து துணை புரிபவன் என்னும் மருமமும் இகளுல் தெரிய வந்தது. மாருதி புரிகிற கருமங்கள் யாவும் கருமங்களை விளைத்து வருகின் மன; அந்த விவேகளின் விளைவுகள் ஈண்டு உளம் அறிய வந்தன. தான் கெஞ்சம் துடித்து நிலைகுலைந்து கெடிது கலங்கும் படி வஞ்சனை புரிந்து போப் மறைந்திருந்து மாய வேலை செய்கின்ற வனே மாய்க்க மூண்டமையால் இத் தாயவன் தணிந்து பேசி ஞன். வாய்மொழிகள் உள்ளக் கொதிப்புகளையும் உறுதி நிலை களையும் நன்கு உணர்த்தியுள்ளன. கான் எப்பொழுதும் சக்திய