பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,684 கம்பன் கலை நிலை செத்துப் பிழைத்து எழுந்தும் கொஞ்சம்கூடப் புக்தியில்லாமல் நெஞ்சம் துணிந்து நேரே நீ வந்து விரவாதம் கூறுவது எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது. அனைவரும் அழிந்து ஒழிந்து போகும் படி விதி உங்கள் மதியைக் கெடுத்துப் பிடர் பிடித்து இங்கே கொண்டுவந்து தள்ளியுள்ளதைக் கண்டு கண்டு நான் களித்து கிற்கின்றேன். பிறந்தபோதே விேர் யாவரும் இந்திரசித்து கையால் இறந்து போவிர் என்று உங்கள் கலைகளில் எழுதியுள் ளதை என் விழிகளால் தெளிவாகத் தெரிந்து மகிழ்கின்றேன்; நீ குரங்காப்ப் பிறந்திருந்தாலும் பேச்சுத் திறம் உன்னிடம் பெருகி யிருக்கிறது; வினே ஆரவாரமாய் நீங்கள் பேசுவது போல் கானமின்றி நான் பேச மாட்டேன்; என் வில்லிலிருந்து விடுபட்டு வீறுகொண்டுவருகிற பானங்களே உங்களுக்கு நல்ல பதில்களை நன்கு சொல்லும், இடங்கள் தோறும் கலைமலைகளும் பிணக்குவியல்களும், இரத்த வெள்ளங்களும் பெருகி எழுந்து அருகு எங்கும் விரிவதை விரைவில் அறியலாம்; ஒடி ஒளிந்து போகாமல் எல்லாரும் எதிரே நில்லுங்கள்; நான் வாயால் சொல்லியதை இதோ கையால் செய்து காட்டுகிறேன்' என இன்னவாறு வீரகம்பீரமாய்ப் பேசி வந்தவன் வில்லை எடுத்து யுத்த சன்னத்தனுப்த் தேரில் ஏறிச் சங்கத்தை முழக்கிப் பொங் கிய சினத்தோடு போர்மேல் மூண்டான். நேரே அமர் நீண்டது. போர் மூண்டது. இந்திரசித்து தேரில் காவிப் போரில் மூண்டபோது தேவ ரும் மறுகித் திகைத்து நின்ருர். செய்ய நேர்ந்த வேள்வி முடிய வில்லை ஆதலால் அவன் செத்து விழ்வது உறுதி என்று உள்ளம் துணிந்தாலும் வானவர் யாவரும் அவனுடைய அதிசய ஆற்றலை நினைக்து அடலாண்மைகளை வியந்து பலபல கருதி அலமந்தனர். யாகம் பிழைத்தது; இனி இவன் பிழைக்கலாற்ருன். நிகும்பலையில் செய்த வேள்வி நிறைவேருமல் பிழைபட்டமை யால் இனிமேல் இத்திாசித்து பிழைக்கமாட்டான் என அந்தர வாசிகள் இவ்வாறு சிங்கை துணிந்திருக்கின்ருர், இசனல் அந்த யாகத்தின் அதிசய மருமங்களை அறிந்து கொள்ளுகிருேம. இடையே கடைபடாமல் அத முடிந்திருக்கால் அவனே எவரும்