பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,685 வெல்ல முடியாது; எவ் வழியும் அவனுக்கே செவ்வையாப் வெற்றி கிடைத்திருக்கும் என்பது ஈண்டு உய்த்துணர வந்தது. யாக சித்தியான இந்த மருமக்தை நன்கு தெரிந்திருக்கமை யினுலேதான் வேள்வியை விரைந்து சிதைத்துவிட வேண்டும் என்று இராமனிடம் விபீடணன் அவசரப்படுத்தினன். உளவு நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து அதி வேகமாப் அவன் அாண்டி வேலை செய்தது எதிரியின் சதிக்குச் சாபக்கேடாய் மூண்டது. 'யாகம் முற்றுமேல் யாரும் வெல்லார் வென்றியும் அரக்கர் மாடே' என்று வீர வள்ளலிடம் எச்சரித்து இளையபெருமாளைப் படைகளோடு கடிது அழைத்துவந்து விடணன் இங்கே முடிவு செய்திருப்பது செடிது சிக்திக்கத்தக்கது. தக்க சமையத்தில் பக்கம் பார்த்து மிக்க உதவியை விரைந்து புரிந்துள்ளான். வண்டு வடிவம் கொண்டுபோய்ச் சீதையைக் கண்டதும், இளவலைக் கூட்டிவந்து வேள்வியைக் காட்டி விளிவு செய்துள் ளதும் வியப்புகளை விளைத்து கிற்கின்றன. அபாயமான வேளை யில் உபாயங்களை காடி அரிய உதவிகளை ஆற்றியிருத்தலால் உரி யவர் யாவராலும் வீடணன் ஈண்டுவியந்து போற்றகேர்த்தான். சரித்திரத்தில் பெரும் புரட்சியான இடம் இது; இதில் கோது நீக்கிப் பாதுகாத்தள்ளான் ஆதலால் தீது தீர்த்தான் எனக் கீர்த்தனும் அவனே வியந்து மகிழ்த்து புகழ்ந்து கின்ருன். இலங்கை வேந்தன் மகன் இனி உயிர் வாழ்ந்திரான், செத்தான் என்னும் வெற்றிச் செய்திக்கு அவன் வித்தாப் விளங்கினன். அழைத்தது விதியே. தான் இழைக்க வேள்வி பிழையானதால் இந்திரசித்தினை விதி அழைத்தது; காலதேவனுக்கு இரையாக நேர்ந்தான் என்று தேவர் இவ்வாறு ஆரவாரம் செய்திருக்கின்ருர். அந்தக் களிப்பு அடுத்து நிகழ்வதைத் தொடுத்து விளக்கியது. அரக்கர்க்கு முடிவு மூண்டது; க.ப.க்கு விடிவு நேர்ந்தது என்று வானேர் உவகை கூர்ந்து நின்றுள்ளனர். அரக்கரால் அமரர் அடைக் துள்ள தாழ்வுகள் யாவும் ஒல்லையில் நீங்கி நல்ல வாழ்வுகள் ஒங்கும் என அவர் உள்ளம் களித்திருப்பது உரைகளால் தெளிய வந்தது. அல்லலே கண்டவர் நல்லது காண நாடினர்.