பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,688 கம்பன் கலை நிலை கின்றபடியாம். என் பானங்கள் உன்னைச் சித்திரவதை செய்து விடும்; வினே செத்துப்போகாதே; அயலே ஒடிப்போய்விடு' என இவ்வாறு மேகநாதன் விரவாதம் கூறி வேகமாய் மூண் டான். அவனுடைய கோபமும் கொதிப்பும் கொடுமையாப் நீண்டன. கடுமையான போர் நேரே கதித்து கின்றது. கமனுக்கு நமய்ை கின்ருன். இந்திரசித்துக்கு இப்படி ஒரு புதுப்பெயர் சூட்டி அவனுடைய அதிசய ஆற்றலையும் அட்லாண்மையையும் கவி நமக்கு வரைந்து காட்டியிருக்கிருர். எல்லாரையும் கொல்ல வல்ல எமனும் இந்திர சித்தின் எதிரே குலை நடுங்கி நிற்பன் என்பது இக்குறிப்பினுல் தெரிய வந்தது. காலனுக்கும் காலன் என்றது எவரையும் எளிதே அழித்து ஒழிக்க வல்லவன் எனக் கொலை நிலையில் அவ னது தலைமையைக் கருதியுணர்ந்து தெளிந்து கொள்ளநேர்ந்தது. இத்தகைய கொடிய போர் வீரைேடு அனுமான் நேரே போராட நேர்ந்ததை நோக்கி அமரரும் அதிசயித்துத் துதி செய்து கின்றனர். சேர்ந்த போர் நேர்மாருப் கின்றது. செடிய தேரில் கொடிய வில்லோடு அவன் வீறுகொண்டு நிற்கின்ருன். இவன் தரையில் கல்லோடு கடுத்து மூண்டுள் ளான். இத் தீரன் எதிர்ப்பு அவ் வீரனுக்கு வெப்ய வெகுளியை மூட்டியது. காகபாசம் முதலியவற்ருல் மாண்டு மடிந்தவன் மீண்டும் மீண்டும் வந்து போராடுகின்ருன்; அவமானமா இகழ்ந்து பேசுகின்ருன்; இவனுடைய கலையைக் கணித்துவிட வேண்டும்" என்று கொடிய கொலை நோக்கோடு குறி வைத்து அம்புகளை அவன் கடுத்துக் கொடுத்து அடலோடு விடுத்தான். அந்தப் பாணங்கள் யாவும் வீணே சிதைந்து விளியும்படி லகுபாய்ந்து அயல் நின்று கன் கையிலிருந்த குன்றை வென்றி வீருேடு வீரமாருதிஅைவன் தேர்மேல் வீசி எறிந்தான். அம் மலையை நிலை குலைத்து நீறு செய்து வீழ்த்தி அனுமான் மீது அம்புகளை அவன் வாரிச் சொரிக்கான். உச்சிமுதல் உள்ளங்கால் வரையும் பகழிகள் கடிது பாய்ந்து கெடிது ஊடுருவிப் போயின. அனுமான் அயர்ந்தது. உடல் முழுதும் இரத்தம் சொரிந்து ஒடினும் அடலாண்மை