பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4690 கம்பன் கலை நிலை அனுமனைக் கண்டிலிரோ அவனிலும் வலியரோ என் தனுவுள தன்ருே தோளின் அவ்வலி தவிர்ந்ததுண்டோ? இனிமுனே ரேலீரோ எவ்வலி ஈட்டி வந்திர்? மனிதரைக் காட்டி நுங்தம் மலைதொறும் வழிக்கொளிரே! (3) தன்ைேடு போராட வந்து மூண்டவர்களைத் துச்சமா எண்ணி இந்திரசித்து இப்படி உச்சமாய்ப் பேசியிருக்கிருன். உக்கிர விர னை சுக்கிரீவனையும் மதியாமல் எள்ளி இகழ்ந்திருப்பது அவ னது உள்ளக் கருக்கையும் உறுதி ஊக்கங்களையும் நன்கு உணர்த்தி நிற்கின்றது. தேவர்கள் எல்லாரையும் எளிதே வென்று அதிசய நிலையில் யாண்டும் வாழ்ந்து வந்தவன் ஆதி லால் அந்த விர வெறி அவனிடம் விறுகொண்டுள்ளது. அந்த உண்மை இடையிடையே உரைகள் தோறும் வெளிவருகின்றது. அமரர் அசுரர்களோடு அமராடி உயர்ந்தவன் அயலார் எவரையும் எளிதாக எண்ணுவது இயல்பாப் நேர்ந்தது. அட லாண்மைத் திமிர் உடலோடு வளர்ந்து வந்துள்ளமையால் உரைகள் மிடுக்கும் துடுக்கும் மீறி மிடலேறி வந்தன: 'குரங்குச் சாதிக்குத் தலைவனை எ சுக்கிரீவா நீ பெரிய ஒரு போர் விரன் போல் என்ளுேடு போர் செய்ய வந்துள்ளாயே! உனக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா? கொஞ்சமாவது நெஞ்சில் உணர் விருந்தால் அஞ்சாமல் இப்படி வந்திருக்கமாட்டாப் சிங்கம் யானையோடு போராடுமே அன்றி குரங்கோடு எங்கேயாவது போராட நேருமா? வினே செத்துப்போகத் துணிந்து ஒரு சிங்க ஏற்றின் எதிரே சிறு குரங்கு ஒன்று மூண்டு வந்தது போல் ஈண்டு என் எதிரே நீ நீண்டு வந்து நிற்கின்ருப்! கின்ரு லும் நான் உன்னைக் கொன்று தொலைக்க மாட்டேன்; உன் மேல் அம்பு தொடுப்பது என் குல வீரத்துக்கே பெரிய இழுக் காம். அந்த இராமன் தம்பி எங்கே இருக்கிருன்? அவனே எனக்கு நேரே காட்டிவிட்டு நீ அயலே ஒடிப் போய்விடு; உனக்கு உயிர்ப்பிச்சை தந்திருக்கிறேன்; சாகாமல் தப்பிப் பிழைத்துக்கொள்' என்று வாணர வேந்தனை நோக்கி இலங் கைவேக்கன் மகன் இப்படிப் பேசியிருக்கிருன். பேச்சில் அவ அடைய வீரப்பாடும் வெற்றிக் திறலும் ஆரவாரமான அரிய பெருமித கிலேயும் ஒருமுகமாய் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன.