பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4694 கம்பன் கலை நிலை இலக்குவன் மூண்டது. கம் படைகள் யாண்டும் கொடுமையாய் மாண்டு மடிகின்றன; எதிரியை விரைந்து அழித்து ஒழிக்கவேண்டும் என விபீடணன் வேண்டவே இலக்குவன் மூண்டு முன் ஏறினன். இந்திரசித்து எறியிருக்கும் தேர் எதிரே இளையவன் வில்லோடு வெகுண்டு வரவே அனுமான் இடையே வந்து தன் கோள்மீது எறியிருந்து போர் புரியும்படி பேரன்போடு வேண்டி நின்ருன். அவ் வீரன் வேண்டியபடியே இவ்வித்தகன் ஏறவே மேகநாதன் தேரோடு வேகமாய்ச் சாரிதிரிந்தான். கதிவேகங்கள் காட்சியாப்கின்றன. இரண்டு போர் வீரரும் கைதேர்ந்த வில்லாளிகள் ஆதலால் ஒருவரை ஒருவர் விரைந்து வெல்ல விழைந்து தங்கள் கரவேக சரவேகங்களைக் காட்டிப் பொருதார். சாரதி தேரைச் சாகச மாப்க் கடாவிச் சாரிசெய்து வருந்தோறும் அனுமான் அதி வேகமாய்க் கதிவேகம்கொண்டு பாய்ந்தமையால் இருவருடைய போராடல் நிலைகளை எவரும் சரியாத் தெரிய முடியவில்லை. பொருத நிலை. இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்னச் செருவீரரும் அறியாவகை திரிந்தார்: கனே சொரிந்தார்; ஒருவீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் பொருவீரையும் பொருவீரையும் பொருதால் எனப் பொருகார். (1) எரிகின்றன. அயில்வெங்கனே இருசேனையும் இரியத் திரிகின்றன புடைகின்றில திசை சென்றன. சிதறிக் கரிபொன்றின பரிமங்கின. கவிசிந்தின கடல்போல் சொரிகின்றன. பொரு செம்புனல் கொலேகின்றனர் கொலேயால். (2) புரிந்தோடின புகைந்தோடி ைபொரிந்தோடின புகைபோய் எரிந்தோடின கரிந்தோடின இடம் ஒடின வலமே - திரிந்தோடின செறிந்தோடின விரிந்தோடின திசைமேல் சரிந்தோடின கருங்கோளரிக்கு இளேயான்விடு சரமே. (3) நீர்ஒத்தன நெருப்பொத்தன பொருப்பொத்தன. கி.மிரும் கார்ஒத்தன உரும்ஒத்த ன கடல்ஒத்தன கதிாோன் தேர்ஒத்தன விடைமேலவன் சிரிப்பொத்தன உலகின் வேர்ஒத்தன செருவொத்திகல் அரக்கன்விடு விசிகம். (4)