பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.695 எங்காளினில் எத்தேவர்கள் எத்தானவர் எவரே இன்னுர்செரு ஒத்தாரென இமையோர் எடுத்தார்த்தார்; பொன்னர்சிலே இருகால்களும் ஒருகால்பொறை உயிரா முன்னுளினில் இரண்டாம்பிறை முளைத்தால் என வ&ளத்தார். வேகின்றன. உலகிங்கிவர் விடுகின்றன. விசிகம் போகின்றன சுடர்வெந்தன. இமையோர்களும் புலர்ந்தார் ஆகின்றதொர் அழிகாலமி தாமன்றென அயிர்த்தார் கோகின்றன திசையானேகள் செவிகாண்ஒலி நுழைய. (6) மீன் உக்கது கெடுவானகம் வெயிலுக்கது சுடரும் மான் உக்கது முழுவெண்மதி மழையுக்கது வானம் தான் உக்கது குலமால்வரை தலையுக்கது தகைசால் ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினில் எங்கும். (7) (கிகும்பலேயாகப் படலம்) இலக்குவனும் இந்திரசித்தும் உக்கிர வீரமாய்ப் போராடி யிருக்கும் நிலைகளை இவை நேரே காட்டியுள்ளன. வில்லாடல் களின் வித்தகத்திறல்களையும் யுத்தவேகங்களையும் உய்த்துணருக் தோறும் உள்ளம் உவந்து வீரவுணர்ச்சி மிகுந்து வி ய ங் து நிற்கிருேம். அரியபோர்கில பெரிய,ஆர்வக் காட்சியாய் கின்றது. இரண்டுபேரும் சிறந்த போர்வீரர்கள் ஆதலால் அதிசய மான அடலாண்மைகளோடு அமராடியிருக்கின்றனர். இவரு டைய போராடல்களை நோக்கி அமரர் எவரும் அதிசயமீதுணர்ந்து துதிசெய்து ஆரவாரம் புரிந்திருத்தலால் மூண்டபோர்களின் நீண்ட நிலைகளை ஒர்ந்துணர்ந்து கூர்ந்து தெளிந்து கொள்ளலாம். பொருவீரையும் பொருவீரையும் பொருதால் எனப் பொருதார். பொருத இருவரது நிலைகளை உலகவிழிகள் தெளிவாக உணர இது இனிது விளக்கியுளது. வீரை = கடல். பொருவீரை என் றது அலைகளை வாரி வீசி எவ்வழியும் கொந்தளித்து மோதி முனிந்த கடல்களே. மலைகள் போன்ற பெரிய அலைகளை மாறி மாறி வாரி எறிந்து மீறி எழுகின்ற இரண்டு கடல்கள் ஒன்ருேடு ஒன்று முரண்டு மூண்டு போராடியது போல் இந்த விரர் இரு வரும் வீர வெறியோடு போராடியுள்ளனர். அந்த உண்மையை இந்த உவமவாசகத்தால் கவி நன்கு விளக்கியிருக்கிருர். கடல்,