பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4696 கம்பன் கலை நிலை ஆழமும் அகலமும் உடையது; எல்லே காண முடியாதது; அச் சமும் திகிலும் வியப்பும் எவர்க்கும் தருவது; உச்ச நிலைகளில் ஓங்கியுள்ள அங்கக் கடல்களை ஈங்கு இந்த வீரர்களுக்கு நேர் குறித்தது எதிர் எதிரே மூண்டு போராடிய அடலாண்மைகளை யும் அதிசய ஆற்றல்களையும் மனக்கண்ணுல் கோக்கி ம தி தெளிந்து கொள்ள வந்தது. வீரப் போர்களின் முறைகளும் துறைகளும் சீவர்களுக்கு ஆர்வங்களை விளைத்து வருகின்றன. கவிகள் காட்டியுள்ள காட்சிகள் வீரச்சுவைகளை ஊட்டி வியப்புகளை நீட்டி வில்லாடல்களின் வித்தகத்திறல்களை விளக்கி யுள்ளன. அசுரர் அமரர் முதலியோர் புரிந்த எத்தகைய போர் களிலும் யாண்டும் காணுக அதிசய அடலாண்மைகள் ஈண்டு இவரிடம் காணசேர்க்கமையால் விண்ணும் மண்ணும் ஒருங்கே வியந்து நின்றன. கேர் ஒத்த வீரர்கள் நிகரற்று நின்றனர். ஒருவீரரும் இவர் ஒக்கிலர். தேவர்கள் இவ்வாறு அதிசயம் மீதார்த்து துதி செய்திருக் கின்றனர். இலக்குவனேயும் இந்திர சித்தையும் ஒரு துலையில் வைத்து நிலையைச் சீர்தூக்கி நேரே உரைத்திருத்தலால் இவரது போரின் திறங்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகின்ருேம். வில்லாளிகளுள் தலைசிறந்த சோடிகள் எல்லா நிலைகளிலும் கிறை ஒத்துப் போராடியிருக்கின்றனர். அந்த அமராடல்கள் அமரர்கள் எவர்க்கும் அதிசயக்காட்சிகளை அளித்து கின்றன. - * எந்தக் காலத்திலும் எவ்வுலகத்திலும் இத்தகைய நிறை ஒத்த சுத்தவீரர்கள் யுத்தகளத்தில் போராடியதில்லை. படைப்புக் காலம் தொட்டு அன்று முதல் இன்று வரை இவ்வென்றி வீரர் களுக்கு நிகரானவர் என்றும் எங்கும் யாரும் தோன்றவில்லை என்பார் ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என உறுதியா உரைத்தார். இன்னவாறு விண்ளுேர் வியந்து புகழ இவ்வீரர் இருவரும் தீரமோடு போராடலாயினர். இரண்டு வில்லுகளிலிருந்தும் பா ணங்கள் எல்லையின்றி எழுந்தன. மந்திர முறைகளோடு கூடிய தெய்வப் பகழிகள் ஆதலால் பாண்டும் சீறிப் பாய்ந்தன. சில ப்ாணங்கள் நெருப்புப் பொறிகளை வாரி விசித் திசைகள் தோறும் சென்று விசய விறகளுடன் விசையாய் உலாவின.