பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4697 இளவல் ஏவிய அரிய பகழிகள் எதிரியின் கணைகளைத் துணித்து விழ்த்தி அயல் எங்கனும் பாய்ந்து அரக்கர்களைக் கொன்று குவித்தன. யானே குதிரை இரதம் காலாள் என்னும் நால்வகைச் சேனைகளும் இடங்கள் தோறும் நாசமாய் மடிந்தன. இந்திரசித்து சிங்தை கனன்று விடுத்த கணைகள் இளையவன் அம்புகளைத் தடை செய்து ஓடி வானரப் படைகளை யாண்டும் அழித்து ஒழித்தன. கால் இழந்தும் கை இழந்தும் கலை இழங் தும் உடல் சிதைந்தும் அடலாண்மை யாவும் இழந்து வானரங் கள் மாண்டு மடிந்த குவியல்கள் யாண்டும் நீண்டு நின்றன. இருபாலும் கொலைகள் ஒரு பாலும் குறையாமல் நிறை ஒத்து நிகழ்ந்தன. தன்னைத் தற்காத்துக் கொண்டு எதிரியை வென்று தொலைக்க மூண்டு இருவரும் ஒரு முகமாய்க் கருதிப் போராடியதில் அரக்கர் திரளும் வானரக் குழுவும் மாய்ந்து மடிய யாண்டும் அம்புகள் விரைந்து பாய்ந்திருக்கின்றன. வில் விக்கையில் இரண்டு வில்லாளிகளும் பல்வகையிலும் கைதேர்ந்தவர் ஆதலால் பாணப்பிரயோகங்கள் எல்லையில்லாத நிலையில் நிகழ்ந்திருக்கின்றன. யாகம் முடியாமல் கடை ஆயதே என்ற துயரம் நெஞ்சில் நிலைகொண்டிருத்தலால் பகைவரை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று கடு வேகமாய் மூண்டு இந்திரசித்து போராடி யிருக்கிருன். அவனுடைய உக் கிர விர நிலை கர வேக சரவேகங்களில் உரம் ஏறி நின்றது. மான வீரங்கள் இருவரிடமும் கறுவு கொண்டு பெருகி எழுந்தன. தன்னை இருமுறை மாய வஞ்சமாய்ப் பங்கப்படுத்தினவன் ஆதலால் இந்திரசித்தை இம்முறை எப்படியும் கொன்று கொலைத்துவிட வேண்டும் என்று கொதிப்போடு இலக்குவன் கடுத்துப் போராடினன். வளைந்த வில் நிமிராதபடி இரண்டு விரரும் பாணங்களை வாரிச் சொரிந்து வீரத்திறல்களை விரித்து வந்தார். சிலைகளின் வளைவுகள் கொலைகளின் நிலைகளை விளக்கின. முன் நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால் என வளைத்தார். இருவரும் பொருத நிலையை நேரே கருதி யுணரும்படி இது வித்தக விநயமா விளக்கியுள்ளது. சுக்கிலபட்சத்தில் இரண் 588