பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4698 கம்பன் கலை நிலை டாம் நாள் வான வீதியில் தோன்றும் பிறைச் சந்திர ஆனப்போல் இருவருடைய வில்லுகளும் ஒரு முகமாய் வளைந்து நின்றன என்றது விளைந்த போரின் வேகத்தை யூகமா உணர்ந்துகொள்ள வந்தது. சிலையின் இரண்டு கோடிகளும் இரண்டாம் பிறை போல் வளைந்தன; பின்பு நிமிரவே இல்லை; அம்புகளை ஒயாமல் கடுத்துத் தொடுத்து வந்தமையால் வளைந்த சிலைகள் வளைந்த படியே கின்றன; அவற்றிலிருந்து பானங்கள் விளைந்து பாய்ந்தன. வீரத்திறல்கள் விரிந்து நீண்டு விரைந்து கின்றன. மாருதியை மாய்க்க மூண்டது. வில்லின் வளைவுகள் விர விளைவுகளாப் விளங்கி வர, எல்லை யில்லாத பகழிகள் எங்கும் பாயப் பொங்கி மூண்ட சினத் கோடு இருவரும் போராடி வருங்கால் இந்திரசித்து கை கொஞ் சம் மிஞ்ச நேர்ந்தது. கதிவேகம் காட்டி அதி வேகமாய்ச் சாரி கிரிக் து வருகிற அனுமான முதலில் தொலைத்துவிட்டால் வெற் வியை விரைவில் பெற்று விடலாம் என்று கருதிக் கூரிய பானங் களைக் கூர்ந்து எடுத்துக் கொலைக் குறிப்போடு கலைக்குக் குறி செப்து அவன் கொதித்து விடுத்தான். அந்த அம்புகள் கடு வேகமாய் வந்து அனுமான் மீது பாய்ந்தன. பாயவே அஞ்ச னைச் சிங்கத்தின் உடல் முழுதும் உதிரங்கள் பீறிட்டு ஒடின. குருதி பெருகி ஓடினும் உறுதி குன்ருமல் மாருதி ஊக்கி உலாவி யது பெரிய அதிசயமாய் மருவி கின்றது. தன்னைத் தாங்கித் தாவி வருகிற அனுமான் மீது இரத்தத்தைக் கண்டதும் இலக்கு வன் உள்ளம் கொதித்தது. உருத்துச் சீறி உக்கிர வீரமாய்க் கணைகளை ஊக்கி விடுத்து எதிரியின் இரதத்தை உடைத்து எறிந் தான். உரியவன் மேனியில் குருதி நீர் காணவே இளையவன் உள்ளம் கனன்று அரிய வேலைகளை அதிசயமாய்ச் செய்தான். மானத் துடிப்பும் பானங்களின் கடுப்பும் படு வேகமாப் நிகழ்ந்தன. அடு தொழில்களை அவை நெடிது செய்தன. \ குருதிப்புனல் சொரியக்குணம் குனிப்பில்லவன் குணபால் பருதிப்படி பொலிவுற்றதை இளங்கோளரி பார்த்தான் ஒரு திக்கினும் பெயராவகை அவன் தேரினே உதிர்த்தான் பொருதிக்கணம் வென்ருன் எனச் சரமாரிகள் பொழிந்தான்.