பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4699 அத்தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் முத்தேவரும் உவந்தார் அவன் உருமேறென முனிந்தான் தத்தா ஒரு தடந்தேரினேத் தொடர்ந்தான் சரம் தலைமேல் பத்தேவினன் அவை பாய்தலின் இளங்கோளரி பதைத்தான். பதைத்தான் உடல் கிலேத்தான் சில பகுவாய் அயிற் பகழி விதைத்தான் அவன் விலக்காத முன் விடைமேல் வருவிமலன் மதத்தால் எதிர் வருகாலனே ஒரு காலுற மருமத்து உதைத்தால் எனத் தனித்தோர்கண அவன் மார்பினில் உய்த்தான். கவசத்தையும் நெடுமார்பையும் கழிந்து அக்கண கழிய அவசத்தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்தார்த்தார் திவசத்தெழு கதிரோன் எனத் தெரிகின்றதொர் கணேயால் துவசத்தையும் துணித்தே அவன் மணித் தோளேயும் துளேத்தான். உள்ளாடிய உதிரப்புனல் கொழுந்தி என ஒழுகத் தள்ளாடிய வடமேருவில் சலித்தான் உடல் தரித்தான் தொள்ளாயிரம் கடும் போர்க்கணே துரந்தானவை சுடர்போல் விள்ளாநெடுங் கவசத்திடை நுழையாதுக வெகுண்டான். (5) மறித்தாயிரம் வடிவெங்கணே மருமத்தினே மதியாக் குறித்தாயிரம் பரித்தோவன் விடுத்தானவை குறிபார்த்து இறுத்தான் நெடுஞ்சாத்தால் ஒரு தனி நாயற்கு இளையோன் செறித்தானுடல் சில பொற்கணை சிலை நானறத் தெரித்தான். இந்திரசித்து பானங்களால் அனுமானத் துன்புறுத்தவே இலக் குவன் கொதித்துப் பொருது அவனை நிலை குலைத்திருக்கும் நிலை களை இக்கவிப்படங்கள் தெளிவாக் காட்டி நிற்கின்றன. கடு வேகமாய் இளையவன் அடுசமர் புரியவே எதிரி படு துயரங்களை அடைந்தான். எறியிருந்த தேர் அழிந்து போகவே வேறு ஒரு கேரில் தாவி நின்று அவன் வெகுண்டு பொருதான். அடுத்துத் தொடுத்த கணைகள் பத்து இலக்குவன் மீது பாய்ந்து போயின. தோளிலிருந்து உதிரம் பாயவே ஆளரிபோல் இளையவன் சீறி எறி விரக் கணைகளை நேரே விரைந்து தொடுத்தான். இளங்கோளரி பதைத்தான் என்றதனுல் இந்திரசித்து எய்த பாணங்களால் இலட்சுமணன் உ ள் ள ம் துடித்துள்ளதை உணர்ந்துகொள்ளுகிருேம். எதிரி சிறந்த வில் வீரன் ஆதலால் இந்த விரக்குரிசில் ஏவிய கணைகளை யெல்லாம் தடுத்து இடை