பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,700 - கம்பன் கலை நிலை வெளி தெரிந்து அடுதிறலோடு அம்புகளைக் கடுத்துத் தொடுத்துக் குறி தப்பாமல் அடித்தான். இரண்டு தோள்களிலும் ஊடுருவி ஒடவே இரத்தம் பீறிட்டு ஓடியது. இந்தக் குருதி ஒட்டம் இளை யவனுக்கு விர வெறியை ஊட்டியது. ஊட்டவே வெகுண்டு மூண்டு பகழிகளை விருேடு கொடுத்தான். விரக்குரிசில் எவிய விரப் பகழிகள் வெற்றித் திறல்களை விளைத்து விரிந்தன. எதிரி இணைந்து நின்றது. இந்திரசித்து ஏறியிருந்த கேர் உடைந்து பாரில் உருண்டது; கவசம் அழிந்து கழன்று விழுந்தது; வில் நாண் அறுந்தது; வில் லும் ஒடிந்தது; மார்பிலும் தோளிலும் பானங்கள் ஊடுருவி ஒடின. அதி வேகமாய் அமராடி வங்க மேகநாதன் மதிமருண்டு மயங்கி நின்ருன். கொடிய காலன் போல் நெடிய விருேடு போராடி வந்தவன் அடு கணைகளால் அயர்ந்து வருக்தின்ை. விடைமேல் வரு விமலன் காலனே உதைத்தால்என ஒர்கணை அவன்மார்பினில் உய்த்தான். போராடி வந்த இலக்குவனையும் இந்திரசித்தையும் இங்கனம் இலக்கோடு காட்டியிருக்கிரு.ர். விடைமேல் வரு விமலன் என்றது. சிவபெருமானே. உருத்திரமூர்த்தி தன் காலால் காலனே மார்பில் உதைத்து வீழ்த்தியதுபோல் இலக்குவன் தன் கணேயை இந்திரசித்தின் மார்பில் உய்த்து மறுகச் செய்து விரப் பொலி வோடு விளங்கி கின்ருன். அங்கிலை அதிசய விசயமாய் கின்றது. குறித்த உவமானங்கள் கூர்ந்து சிந்திக்க நேர்ந்தன. இந்திரசித்தைக் காலன் என்றது கொடுக் தொழிலையும் கொல் லுங் திறலையும் கருதி வந்தது. இளைய பெருமாளேச் சிவபெரு மான் என்றது தலைமை மேன்மை கரும நீதிகள் தெரிய கின்றது. விமலன் என்ற பேர் விழுமிய பொருளுடையது. அருந்திறலும் அடலாண்மையும் ஒருங்கே கிறைந்த பெரும் போர் வீரனை நிலைகுலைத்துச் சிலை வேதத்தின் தலைமைக் களபதி யாப் இளையவன் நிலவி கின்ருன். இக்குல மகனது அதிசய நிலைமையை நோக்கி அமரர் முகல் யாவரும் துதிசெய்து நின்றனர். எ கிரியும் மயங்கி முதிர் வேகமாய் முனைந்தான்.