பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4703 வன் கூர்ந்து நோக்கினன். அயன் படை தொடுக்க அவன் விரைந்தான் என்று தெரிந்ததும் பிரமாஸ்திரத்தை இவன் ஒல்லை யில் எடுத்து வில்லில் பூட்டி வந்தனையோடு சிக்கனே புரிந்தான்: "உலகில் உள்ள பிராணிகள் எதையும் யாதும் ஊறுபடுத்தலா காது; பகைவன் உயிரையும் பருகவேண்டாம்: அவன் எவிய படையையே ஈடு அழித்து வருக” என்று உள்ளம் கருதி ஊக்கி விடுத்தான். பொரு முகத்திலும் அருள் பொங்கி கின்றது. அயன்படை புரிந்த அதிசயம். இவ் விரக் குரிசில் ஏவிய அஸ்திரம் உக்கிர வீரமாய் உருத் துப் பாய்ந்து இந்திரசித்து ஏவியதை அக்தரத்தில் நிறுத்தியது; இரண்டும் எதிரவே எங்கும் தீச்சுவாலைகள் பொங்கி நீண்டன. உடனே அது புகையாய் மாறி இதனுள் தொகையாய் அடங்கி யது; அடங்கவே ஊழிக் கீபோல் இது பாண்டும் உருத்து நின் றது. அந் நிலையை அறிந்ததும் சரசுவதி என்னும் சத்தியை உபா சித்து மற்ருெரு கணையை இளையவன் அதன் மேல் அளவா எய்தான். எ ப்யவே வேகம் யாவும் அடங்கி மீண்டும் இவன் பால் அது விரைந்து வந்து சேர்ந்தது; அங்கக் காட்சியைக் கண்டதும் அமரர் யாவரும் அதிசயம் மீதார்ந்து இளையவனேக் துதிசெய்து நின்றனர். கொலை நோக்கோடு கூடிய கொடிய போர் முகத்திலும் இனிய கருணையை இக் குலமகன் பேணி கின்றது அரிய பெரிய நீர்மையாப் நிலவி கின்றது. விரம் தோய்ந்த அருந்திறலும் ஈரம் தோய்ந்த பெருங் தன்மையும் உயர்ந்த பண்பாடுகளும் ஈண்டு வியந்து சிந்திக்க வந்தன. நன்ருகுக உலகுக்கென முதலோன்மொழி கவின்ருன் பின்ருதவன் உயிர்மேல் செலவு ஒழிகென்பது பிடித்தான் ஒன்ருக இம்முதலோன்படை தனமாய்க்க என்று உரைத்தான் கின்ருன் அது துரந்தான் இவன் கிலேவானவர் கினேந்தார். (1) தான்விட்டது மலரோன்படை எனின் மற்றிடை தருமே வான்விட்டது மண்விட்டது மறவோன் உடல் அறுமே தேன்விட்டுகு மலரோன்படை தீர்ப்பாயெனத் தெரிந்தான் ஊன்விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார். (2) உருமேறுவந்து எதிர்த்தால் அதன் எதிாே நெருப்பு உய்த்தால் வருமாங்கது தவிர்ந்தால் என மலரோன்படை மாயத்