பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4704 கம்பன் கலை நிலை திருமால் தனக்கு இளேயான்படை உலகு ஏழையும் தீய்க்கும் அருமாகனல் என கின்றது விசும்பு எங்கணும் ஆகி. (3) படைஅங்கது படராவகை பகலோன் குல மருமான் இடை ஒன்றது தடுக்கும்படி செந்தியுக எய்தான் தொடை ஒன்றினேக் கனமீமிசைத் துறுவாயினி என்ருன் விடைஎன்ருெரு விடம் உற்றென விடுவித்தது வேகம், (4) இக்கிரசித்து ஏவிய பிரமாத்திரத்தைக் கடை செய்யும்படி இலக் குவன் அதே தெய்வப் பகழியைக் கொடுத்து விடுத்து வெற்றி கண்டுள்ள நிலைகளை ஈண்டு உற்று நோக்கி உள்ளம் வியந்து கிற்கிருேம். கொற்றக் குரிசில் செயல் நித்திய ரீதியாய்கின்றது. கான் கொடுத்துவிட எடுக்க அம்பு அதிசய ஆற்றலுடை யது. ஆதலால் அதல்ை உலக உயிர்களுக்கு யாதொரு கேடும் சேர்ந்துவிட லாகாதே என்று உள்ளம் இரங்கி ஒர்ந்து சிந்தித் திருக்கின்ருன்: அந்த உண்மை உலகு நன்று ஆகுக எ ன்றகளுல் உணர வந்தது. உயிர்கள் துயருருவகை ஒர்ந்து விடுத்துள்ளான். அவன் உயிர்மேல் செலவு ஒழிக. தன் வில்லில் பூட்டியுள்ள பிரமாத்திரத்தை நோக்கி இப்படிப் பாவனை செய்து இலக்குவன் உரையாடி யிருக்கிருன். இந்திர சித்தின் உயிரைத் தொலைக்காமல் அவன் ஏவிய படையை மாத் திரம் தொலைத்து வருக என்று குறித்து விடுத்திருத்தலால் இக் குலமகனுடைய தலைமையான அருள் நிலைமையைத் தெரிந்து கொள்கிருேம். தெய்வீகமான தனது அதிசய ஆற்றலைக் கண்டு தெளிவடைந்து பகைவன் ஒருவேளை உப்தி பெறவும் கூடும் என்றே அவன் உயிரை விட்டு வைக்கும்படி தண்ணளியால் இப் புண்ணிய விரன் கண்ணியமாய் எண்ணியுள்ளான். தனது சொந்த வலியினல் நேர்மையாய் எதிரியை வெல் லவோ கொல்லவே வேண்டும்; வேறு தெய்வாத்திரங்களின் உதவியினல் வெல்லுவது அவ்வளவு சிறந்த வெற்றியாகாது என்று இவ்விரக் குரிசில் யாண்டும் உறுதியாக் கருதி வந்துள் ளான். அந்தக் கருத்தும் குறிப்பும் இங்கே திருக்கமாத் தெரிய வந்தன. நீர்மை கோப்ந்த சீர்மைகள் நேர்மையாப் நிலவின. ரி