பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4705 ந்தமமான சுத்த வீரத்தின் நித்திய நிலை இந்த உத்தமனிடம் ஒளிபுரிந்து மிளிர்கின்றது. இந்திரசித்தோடு போராட மூண்டு எழுந்தபோது தனது அருமை அண்ணன் கனக்கு உரிமையாப் போதித்த யுத்த போதனைகளே இத் தம்பி யாண்டும் பாதும் வழு வாமல் கழுவி வந்திருப்பது விழுமிய பண்பாடாப்க் கெழுமி நிற்கின்றது. உரிய தமையன் உரை அரிய மறையாயது. சிவாத்திரம் முதலியவற்றைப் பகைவன் வி டு க் கால் அவற்றைத் தடுக்கும் கிமித்தமே நீ எதிர் தொடுக்க வேண்டும்; அரிய வரபலங்களால் வந்த அந்தத் தெய்வப் படைகளைக் கொ ண்டு எதிரியை வெல்லுவது அவ்வளவு சிறந்தது அன்று; உனது இயல்பான அடலாண்மையால் வெல்வதே மிகுந்த சிறப்பாம் என்று இராமன் உரைத்து விடுத்த குறிப்புகள் இளையவன் உள் ளத்தில் நன்கு பதிந்து உள்ளன. ஆதலால் அந்த உத்தம வெற்றி யையே இச்சுத்த விரன் பெற விழைந்து எவ்வழியும் செவ்வை யாப் அறதிேகளைத் தழுவிப் போராடி வருகின்ருன்.

  • உன் சிலேவலித் தருக்கினலே

அவன் ஆவிகொண்டு போதுதி ' இளையவனே இந்திரசித்தின் மீது போராட ஏவிய பொழுது இராமன் இவ்வாறு கூறிவிடுத்திருப்பது இங்கே கூர்ந்து சிக் திக்க வுரியது. அண்ணன் பணித்த அந்த உத்தரவின் படியே கம்பி பணி செய்து வருகிருன். தெய்வீக ஆயுதங்களை அவன் கடுத்துத் தொடுத்தால் இவன் அவற்றை அடுத்துத்தடுக்கின் முன்; அவ்வளவே அல்லாமல் அப் படைகளை முன்னதாக எவி அவனை வெல்ல விரும்பவே இல்லை. புனிதமான இவனது விரத் திறல் தனி மகிமையுடையது. மனித சமுதாயம் கருதி உணர்ந்து உறுதி நலங்களை உணர்ந்து கொள்ள ஒளி புரிந்துள்ளது. சிறந்த தரும வீரன் என்பதைக் கரும வீரங்களால் காட்டி வருகிருன். முன்னம் பராமுகமாய் அயர்ந்திருந்த போது இந்திரசித்து பிரமாத்திரத்தை ஏவி இலக்குவன் முதலாகப் படைகளை யெல் லாம் படு கொலை செய்து போனன். இப்பொழுது எச்சரிக்கை யாய் எதிரி நிலையை நேரே கண்டு கொண்டமையால் அயன் படை தொடுத்து அவனது வியன் படையை விளியச்செய்தான்.

  • இந்நூல் பக்கம் 4658, வரி 32 பார்க்க

589