பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4706 கம்பன் கலை நிலை இவன் ஏவிய பானம்.அவனது பாணக்கை நேரேவிழுங்கி மீண்டு வந்து இவன்பால் சேர்ந்ததைக் கண்டு விண்ணுேர் யாவரும் வியந்து துதித்தனர். கண்ணுதல் கடவுள் அவர்க்கு உண்மையை உணர்த்தினர். பரம்பொருள் பகர்ந்தன. அயலே வருகின்றன. மகாதேவன் மதி மொழி. நாராயண கரர் என்பவர் உளராய் நமக்கு எல்லாம் வேராய் முழுமுதல் காரணப் பொருளாய் விகின கடந்தோர் ஆராயினும் தெரியாததொர் நெடுமாயையின் அகத்தார் பாராயண மறை நான்கையும் கடந்தார் சில பழையோர். (1) அறத்தாறு அழிவுளதாமென அறிவும் தொடர்ந்து அணுகாப் புறத்தார் புகுந்து அறத்தாரெனப் புகுந்தன்னது புரப்பார் மறத்தார் முதல் குலம் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா வகை திரிவார். உயிர்தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் அயிராகிலே யுடையான் இவன் அவன் இவ்வுலகு அனேத்தும் தயிர்தோய் பிரை எனலாம் வகை கலந்தேறிய தலைவன் பயிராததொர் பொருள் இன்னது என்று உணரீர் அது பரமால் நெடும் பால் கடல் கிடந்தானும் பண்டிவர் நாம் குறை நேர விடும்பாக்கியம் உடையார்களேக் குலத்தோடு அற விட்டி இடும்பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைக்தார் என இதெல்லாம் அடும்பாக்கியத்துடைச் செஞ்சடை முதலோன் பணிந்து அமைந்தான். அறிந்தேயிருந்து அறியேம் அவன் நெடுமாயையின் அயிர்ப்பேம் பிறிந்தே மினி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தேம் எறிந்தேம் பகை முழுதும் இனித் தீர்ந்தே இடர் கடந்தேம் செறிந்தோர் வினேப்பகைவா! எனத் தொழுதார் நெடுங்தேவர். தேவாதி தேவனை சிவபெருமான் இராம இலக்குவரது நிலைகளைக் குறித்து தேவர்களுக்கு உரைத்திருப்பதை இக்கவிகள் சுவையா உணர்த்தி நிற்கின்றன. காப்புக் கடவுளான திருமாலே இராமன், இலக்குவன் என மனித உருவங்களில் மருவி நின்று புனித கருமங்களை நிலை நிறுத்திப் பாவகாரிகளை அழித்து ஒழித் துத் தேவர்களைக் காத்தருள நேர்ந்துள்ளான் என ஒர்ந்து உணர உரைத்துள்ளான். பரமபதி அருளிய அரிய பொருள் மொழி களைக் கேட்டு அமரர்கள் யாவரும் பெருமகிழ்வு எய்தினர்.