பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4711 பெண் ஆர்த்தனள் அறம்ஆர்த்தது புறம்ஆர்த்தது பெரிதால். (10) (நிகும்பலேப் படலம் 151-160) இங்கே திகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை மானச நோக்கால் ஊன்றிக் காண்பவர் அரிய பல மருமங்களை அறிந்து அதிசயம் மீதுணர்ந்து மகிழ்ந்து நிற்பர். சரிதக் காட்சிகள் உணர்ச்சிகளை விரித்து வியப்புகளை விளைத்த உண்மைகளைத் துலக்கி கிற்கின்றன, தெய்வீகமான எல்லா ஆயுதங்களினும் பாசுபதம் பெரு மகிமையுடையது பே ாற்றல் மிகுந்தது; ஊழித்தீயாய் உலகங் அழித்து ஒழிக்க வல்லது. அத்தகைய அற்புக வலியுடை பதை இந்திரசித்து மந்திரசித்தியோடு பூசனை புரிந்து இலக்கு வன் மீது ஏவினன். எவவே யாவரும் மறுகினர். இவன் உயிர்கோடலுக்கு ஐயம் இலே. தான் எய்கின்ற பாசுபகாத்திரத்தால் இலக்குவன் இறங்கே போவான் என்று அவன் உறுதியா கத் துணிந்து விடுத்திருத்தலே இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். அந்தத் தெய்வப் பகழி வில்லிலிருந்து விடுபட்டவுடனே பல்லாயிரக் கணக்கான சூலங் களும் மழுக்களும் சுடு கணைகளும் அடு தொழில் புரிய அ.கி லிருந்து கெடிது தோன்றி யிருக்கின்றன. தேவர்முதல் யா வரும் கலங்கி அலமாலடைந்தனர். யாண்டும் கொடுங் தியாய் விரிந்து நெடுஞ்சுவாலைகளை விசி விரைந்தமையால் வானா சே&னகள் யாவும் நடுங்கின. விபீடணனும் நிலைகுலைந்து நெஞ்சம் கலங்கி இளைய பெருமாளே அணுகி உளம் மிக மறுகினன். வீரா இது விலக்கும் தரம் உளதோ? என்று இலக்குவனே நோக்கி விடணன் இப்படிக் கலக்கக் தோடு வினவி இருத்தலால் அவன் மறுகி மருண்டு வெருவி யுள்ள நிலை தெரிய வந்தது. இவ்வாறு அவன் கேட்டபோது இவ்வீரக் குரிசில் யாதும் பதில் சொல்லாமல் உல்லாசமாப் நகைத்தான். சிரிப்பு நிலை சிங்தை நிலையை விளக்கியது. அதற்கு இளங்கோளரி சிரித்தான். எவ்வழியும் தனக்கு உறுதித் துணையாய் கின்று ஊக்கம் ஊட்டி வந்த வீடணன் ஊழித்திபோல் உருத்து வருகிற பாசுபத நிலை