பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4712 கம்பன் கலை நிலை யைக் கண்டதும் பதறித் தவித்து அலமரலடைந்து அயர்ந்து மொழிக்கதை நோக்கி இளையவன் வியந்து கிரிக்க நேர்ந்தான். இக்கச் சிரிப்பு:அரிய பல குறிப்புகளை மருவி வந்துள்ளது. அல்லல் சேர்க்கபோதெல்லாம் நல்ல உறுதி மொழிகளை நன்கு சொல்லி உள்ளம் தேற்றி வந்த வல்லவன் இப்பொழுது உள்ளம் கலங்கியது இளையவனுக்கு வியப்பை விளைத்தது. அந்த வியப்பு சிரிப்பை விரித்தது. தன்னை இன்னமும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை என்ற குறிப்பும் அந்தச் சிரிப்பில் தொனித்து கின்றது. இளங்கோளரி என்றது வீர கம்பீரம் தெரிய வந்தது. ஈசன் அருளால் எய்திய பாசுபதம் தன்னிடமும் உள்ளது; இதல்ை அரக்கன் ஏவியதை அடக்கிவிடலாம் என்ற உறுதியும் உள்ளத் துணிவும் இளையவனிடம் பெருகி நின்றன; அந்த விரத் திறலோடு வெளிவந்த வெற்றிச் சிரிப்பாய் அது ஒளி செய்து எழுந்தது. அபாயத்தில் சிரித்தது அதிசயமாய் நேர்ந்தது. உறுதித் துணையாப் உற்ற வானரப் படைகளின் கலக்கத் தையும், வீடணனது மறுக்கத்தையும் கண்ட இளையவன் அஞ்ச வேண்டாம் என்று அவர்க்கு ஆதரவு கூறி உடனே பாசு பகத்தை எடுத்து மந்திர முறையோடு சிந்தனை புரிந்து விடுத் தான். கருதிய ஏவிய நிலை அரிய நீதியாய் நிலவி நின்றது. அதை அழி' மற்று ஒருதொழிலும் செய்கிலே. தான் வில்லில் தொடுத்த சிவாத்திரத்தை நோக்கி இலக்குவன் இப்படிச்சொல்லியிருக்கிருன். எதிரி ஏவியுள்ளதை அழித்தருள்; வேறு எவ்வுயிர்க்கும் யாதொரு துயரும் செய்யாதே என்று ஈசன் கணையைப் பூசனை புரிந்து ஏவியிருத்தலால் இவனுடைய கருணை நீர்மை காண வந்தது. இங்ங்னம் கருதி விடுத்தபடியே பாசுபதம் கடுவேகமாய்ப் பாய்ந்தது; பாயவே சூரியன் எதிரே சக்திரன் மழுங்கியதுபோல் இந்திர சித்து மந்திர சித்தியோடு ஏவியிருக்க அந்த அம்பு ஒளியிழந்து கின்றது; உடனே அதனைத் தன்னுள் அடக்கிக்கொண்டு மீண்டு வந்து இளையவன் அம்புக் கூட்டை அடைந்தது. உலகமெல்லாம் அஞ்சி நடுங்க ஊழித் தீபோல் உருத்து உக்கிர வீரமாப் ஒளி விரிந்து கின்ற சிவாத் தீரம் இவனது பாசுபதத்துள் ஒடுங்கி மறைந்தது அதிசயக்