பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 4,713 காட்சியாய் விளங்கி கின்றது. நடுங்கி நின்ற தேவர் முதல் யாவரும் பேரானந்தம் அடைந்து இளைய பெருமானைப் புகழ்ந்து வாழ்த்தி வியந்து துதித்து உவந்து போற்றினர். விண்ஆர்த்தது, மண்ஆர்த்தது: அறம்ஆர்த்தது; புறம்ஆர்த்தது. இலக்குவனது அதிசய ஆற்றலையும் வெற்றி நிலையையும் கண்டு விண் உலகமும் மண் உலகமும் தரும தேவதையும் வேறு பல சிவகோடிகளும் மகிழ்ச்சி மீதார்ந்து ஆரவாரித்திருத்தலை இது விளக்கியுள்ளது. இவ்விரக் குரிசில் செய்து வரும் கருமம் கரும காரியமாய் உலக நன்மையை நோக்கி கிற்றலால் உயிரினங்கள் யாவும் உவந்து களிக்க நேர்ந்தன. வானா விரர்கள் எல்லாரும் இம் மான வீரனது மகிமையை வியந்து உவகை மீதுணர்ந்து புகழ்ந்தனர். இவனது அதிசய நிலை எதிரியை ஏங்கச் செய்தது. இந்திரசித்து கொதித்தது. எவ்வழியும் தப்பாது வென்று வரும் திவ்விய மகிமை யுடையது என்று வாழ்நாள் முழுவதும் தெளிவாய் நம்பியிருந்த பாசுபதம் பழுகாப்ப் போகவே இந்தி சித்து உள்ளம் துடித்து உளைந்து கனன்ருன் நேர்ந்த அழிவுகளையும் இழிவுகளையும் நினைந்து நினைந்து சினந்தான். தெய்வப் பகழிகள் சிதைந்து போனுலும் கையில் இருக்கும் கணைகளைக் கொண்டே ஆன வரையும் வானர சேனைகளைக் கொன்று தொலைத்துவிட வேண் டும் என்று வென்றி விருேடு மூண்டான். எதிரே பொருது கின்ற இளையவனே அயல் ஒதுக்கி விட்டுத் தேரைக் கடிது செலுத்திப் படைகளைப் படுகொலையா கெடிது வதைத்தான். சுக்கிரீவன் அங்கதன் நீலன் நளன் முதலிய பெரிய சேனைத் தலைவர்கள் எல்லாரும் அவனுடைய பாணப் பிரயோ கங்களால் படுதுயரடைந்தனர். உள்ளம் கடுத்து உருத்து மூண்டு உக்கிர வீரமாய் அவன் போராடி வருங்கால் நேரே விடணனைக் கண்டான். தேரை நிறுத்தினன்; போரையும் நிறுத் தினன். மான விரங்களோடு மறுகி உரையாடினன். சீறி உரைத்தது. சிறிய தங்தை என்ற பரிவு உள்ளே பெருகி யிருந்தாலும் 590