பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,715 ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தில்ை உயிர்வந்து எய்தும் மானுடர் இலங்கை வேந்தைக் கொல்வரே நீயும் அன்ன்ை தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதிய்ே சரத்தி ைேடும் வானிடைப் புகுதி அன்றே யான்பழி மறுக்கின் என்ருன். (8) (கிகும்பலைப் படலம், 162-169) இந்தப் பாசுரங்களைக் கூர்ந்து படியுங்கள்; உரைகளில் மருவியுள்ள பொருள்களையும் உணர்ச்சி நிலைகளையும் ஒர்ந்து கவனியுங்கள். நெடிய மன வேதனைகளோடு மேகநாதன் நிலை குலைந்து பேசியிருக்கிருன்; உள்ளத்தில் கவிந்துள்ள துயரங்களை வார்த்தைகள் வெளியே தெளிவா வார்த்துக் காட்டியுள்ளன. சிறந்த வீரக் குடியில் பிறந்தவன்; உயர்ந்த அரச குலத் | தோன்றல்; தன் குடியில் நிகழ்ந்திருப்பதை நினைந்து கெடிது கவன்றுள்ளது நேரே தெரிய வந்தது. தனது தங்தையோடு உடன் பிறந்த சிறிய கங்தை பகைவரோடு சேர்க்கிருப்பது மிகவும் இழிவான கொடியபழி என்று குலை தடித்திருக்கிருன். குடும்பப் பாசம், குலமானம், உரிமை அன்பு முதலிய பிரிய சீர்மைகள் மொழிகள் தோறும் ஊடுருவி ஒளிகள் வீசுகின்றன. உள்ளப் பரிவும், பிள்ளைப் பாசமும் ஒருசிறிதும் இன்றித் தன்னைக் கொல்ல மூண்டு பகைவனை ஒல்லையில் அழைத்து வந்து எல்லையில்லாத கேடுகளையெல்லாம் இழைத்து நிற்பவன் விடண னே என்று சிங்தை தெளிந்துள்ளமையால் இக்கிரசித்த அவனைச் றிேக் கொதித்துச் செயிர்த்து இகழ்ந்து சினந்த பழிக்கான். கும்பி கொதித்து மொழிந்தது.

இலங்கை வேந்தன் தம்பியாப்ப் பிறந்தம் இழிநிலையில் கழிந்து போய்ப் பழிநிலையில் கிமிர்ந்துள்ள ஏ குலத்துரோகியே! உன் கலையைத் தணித்து இப்பொழுதே கரையில் உருட்டுவேன்; அப்படிச் செய்யாமல் கான் பொறுத்திருப்பது எ கனல் தெரியு மா? சிற்றப்பனைக் கொன்ருன் என்ற பழி வெற்றி விரனை எனக்கு விளைந்து விடுமே! என்று நாணியே உன் உயிரை நான் உனக்கு விட்டிருக்கிறேன்; மானம் கெட்டு மடமையாய்ப் போப் மனிதனுக்கு அடிமையா யிருக்கின்ருயே! அந்த இளி நிலையை நினைந்து நினைந்து என் நெஞ்சம் வருக்கி நோகின்றது.