பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,716 கம்பன் கலை நிலை மூன்று உலகங்களும் தொழுது வழிபடும்படியான அரியபெரிய அரச வாழ்வே ஆயினும் அது பழி வழியே வருமாயின் விழுமிய மானிகள் அதனை விழிதிறந்தும் பாரார்; வெறுத்தே விலகுவர்; * சுத்த வீரர் எவரும் உனது ஆசைப் பிக்கை எள்ளி இகழுவர்; மானம் அழிந்து ஈனபாப் வாழ்வதினும் மாண்டு போவதே மேன்மையாம், இலங்கா ராச்சியத்தைத் தனியே இனிது ஆள லாம் என்ற பேராசை உன்னைப் பேயாப்ப் பிடித்திருக்கலால் பிழை வழிகளில் இழிந்து அழிதொழில்களைச் செய்து வருகி ருப்; உனது ஆசை அவலமானது என்பதை நீ பாதும் அறிய வில்லை; நீர்இருக்கும் வரை மீன்கள் நிலைத்திருக்கும்; அதுபோல் என் தந்தை இருக்கும் வரையும் அரக்கர்கள் அதிசய நிலைகளில் செழித்திருப்பர்; அவர் அழிந்துபட நேர்க்கால் யாவரும் அடி யோடு அழிந்தே போவர்: நீ யாரை வைத்து அரசு ஆளுவாய்!! ஊர் இருக்கும்; நீ இருப்பா ப், வேறு யார் இருப்பார்? அரச திருவின் மேல் உள்ள ஆவலால் அறிவிழந்து கொடிய வெறிய ய்ை அவகேடுகள் செய்கின் ருயே! பின்னல் விளையும் விளைவைச் சிறிது சிந்தித்துப் பார் தேவர்கள் யாவரையும் வென்று, தேவ தேவனை திருமாலேயும் தொலைத்து, முழுமுதல் கடவுளான ஈசனேக் கயிலாசகிரியோடு எடுத்துக் கலக்கிய அதிசய விரளுன இராவணன் இறந்த பின்பு நீ இலங்கையிலிருந்து வாழலாம் என்று அவாவி இருக்கின்ருயே! இது எவ்வளவு நீசம்? எத்துணை ஈனம்? நீ உய்த்துணர வேண்டும், மான உணர்ச்சி உன்னிடம் இம்மியும் இல்லை என்பது செம்மையாய்த் தெரிகின்றது. அமரர் o எவரும் ஆளடிமை செய்ய அகில உலகங்களும் புகழ வாழ்ந்த பெரிய அரச குடியில் பிறந்த நீ மனிதருக்கு அடிமையாய்ப் போயிருக்கின்ருயே! உன்னல் என் குலத்துக்கெல்லாம் கொடிய பழி நேர்ந்தது என்று நான் கெடிது வருந்துகின்றேன். இனத் துரோகம், தேசத்தரோகம், குடித்துரோகம், குலத்துரோகம் முதலிய எல்லாத் துரோக ங்ச ளுக்கும் நீ நிலையமாய் நிற்கின் ருய்; உனது கிலே அபிமானம் இழக்கது. முழுதும் அவமானம் உடை யது. உன் தங்கையை மூக்கு அறுத்து மூளி ஆக்கி ஊழியும் தேயாக இளிவைச் செய்துவிட்ட அந்த மனிதரோடு உறவாப்க் கூடிக் கொண்டாயே! மானம் நானம் மரியாதைகளைக் கனவி அம் கூட நீ கண்டிருக்க மாட்டாப் என்பதை உன் வாழ்க்கை o