பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4719 உலகம்எல்லாம் எதிரே தொழுது வணங்கப் பொன்னுலக அரசே கிடைப்பது ஆயினும் மானம் அழியவரின் அவ் வாழ்வு ஈனமே யாம். மானத்தைப் பேணி மரியாதையோடு வாழ்பவன் வானத் கையும் வையத்தையும் ஒருங்கே ஆள்பவனிலும் யாண்டும் என்றும் உயர்ந்தவனுவான் என உணர்த்தி நின்ருன். உடன் பிறந்த அண்ணன் அழித்துக் குலத்தவரை அடி யோடு ஒழித்த இலங்கை அரசை அடைய விழைந்து கொடுமை யான அவகேடுகளைக் கடுமையாய்ச் செய்து வருகிருயே உனது வாழ்வு ஒரு வாழ்வா? என்று வீடணனை இந்திரசித்து இங்ங்னம் இகழ்ந்து நின்றது அவன் சிங்தை நொந்து வந்துள்ள தைத் தெரியச் செய்தது. மனக்கொதிப்பு மண்டி வந்தது. அரச பதவியைக் கபடமாக் கவர்ந்து கொள்ள விரும்பியே பகைவரோடு சேர்ந்து கொண்டு கன் குலத்துக்கு அழிவு வேலை களை எவ்வழியும் இழைத்து வருகிருன் என்று இழித்து கின்ருன். ஐயா அரசு வீற்றிருக்க கின்னேடு ஆர் உளர்? தன்னேடு இருப்பவரை எண்ணி உணருமாறு இவ்வாறு இடித்துக் கூறினன். நீ கருதியபடியே இலங்கை ஆட்சியை அடைந்து கொண்டாலும் அங்கே குடிசனங்களாய் எவரும் இரார்; நீ யாரை வைத்துக் கொண்டு பேரரசனுப்ப் பெருமை காட்டுவாய்? என்று அவனது வாழ்வின் காட்சியை வரைந்து காட்டினன். தன் கங்தை அழிய நேர்ந்தால் #1 க்கர் குலத்தில் ஒருவனும் மிஞ்சி இருக்க முடியாது என்று இம் மைந்தன் கருதியிருப்பது இங்கே மரும்மாய் நன்கு அறிய வந்தது. ஐயா என்று அழைத்தது சிறிய தகப்பன் என்ற முறை யில் உரிமை தோய்ந்து வந்தது போல் தோன்றினும் இகழ்ச்சிக் குறிப்பாகவே அவ் விளி ஒலித்து நிற்கிறது. மனத்தில் வெறுப் பும் சினமும் விரவியுள்ளமையால் குறிப்பு மொழி கூர்மை பாய்த் தோன்றியது. கூறிய உரை கூரிய நோக்குடையது. இலங்கை ஆட்சி இளவரசு என்ற முறையில் இந்திரசித் துக்கு கேரே வரவுரியது; அந்த அரிய அரச திருவைக் கரவாய்க் கவர்ந்து கொள்ள விரும்பி எதிரியோடு சேர்ந்து இடர் புரிந்து