பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4721 கொழ வாழ்க்க அரிய அரச வாழ்வு அடியோடு அழிய நேர்க் கதே என்ற கவலை இக்குலமகன் உள்ளத்தில் உலாவி வரு வகை இடையிடையே உரைகளில் ஒர்ந்து வ்ருகிருேம். குடும்பப் பாசமும் குலமானமும் இவனிடம் கெடிது ஓங்கியுள்ளன. கனது தங்கையின் உருவத் தோற்றத்தையும் பெருமிதத் கையும் உறுதி ஊக்கத்தையும் இராச கம்பீரக்கையும் விரத்திறலை யும் உவந்து வியந்து இம்மைக்கன் வந்துள்ளமையை வாய்மொழி இங்கே உணர்த்தி நின்றது. எழுதி ஏர் அணிந்த திண்டோள் என்ற இக்க வாசகம் உழுவலன்பு தோய்ந்து விழுமிய பண்பு வாய்ந்து வீரப் பொலிவு மீதுணர்ந்து நேரே வெளிவந்துள்ளது. அதிசய வீரனை இத்தந்தை அநியாயமாப் மாண்டுபோக மூண்டு கிற்கின்ருரே என்ற கவலை இம் மகனிடம் நீண்டு கிற் கின்றது. எங்தை என்னுமல் இராவணன் என்றது உலகப் பிரசித்தி பெற்றுள்ள அவனது தலைமையும் நிலைமையும் தெரிய. வெள்ளியங்கிரியை அள்ளி எந்திய அந்த அதிசய விரன் துள்ளி விழுந்து சாக நேர்ந்துள்ளான் என்பது உள்ளி உணர வந்தது. இராமபாணம் இராவணனைக் கொன்றே தீர்க்கும் என்று இவ்வென்றி வீரன் முடிவு செய்திருப்பது மொழி வழியே வெளிவரலாயது. மனதில் பதிவாயிருந்தது உலகம் தெரிய வந்தது. அழிவு நிலை விழி எதிரே தெளிவாயுள்ளது. போரில் உன் அண்ணன் செத்து விழுந்தால் நேரில் கிற்கிற நீ அவன் மேல் விழுந்து அழுவாயா? அல்லது ஆனந்தத்தால் சிரிப்பாயா? என்று மன வேதனையோடு வினவியது விநயமான பரிகாசமாம், புழுதியே பாயலாக என்றது அழுதுயரமா வந்தது. இராவணனைக் குலத்தோடு அழித்து ஒழித்துவிட்டு இலங்கா ராஜ்யத்தை ஆளலாம் என்று பேராசையால் பெருகி கிற்கிற எ விடணு! நீ எண்ணியபடி யாதும் முடியாது; உன் மண் ஆசையில் மண்ணே விழும்; உங்கள் எல்லாரையும் ஒருங்கே கொன்று வென்றி வீறுடன் நான் இலங்கை புகுவேன்; என்றும் எங்கள் அரசு கன்ருய் நின்று நிலவும் என நேரே கூறி கிலேமையையும் தலைமையோடு துலக்கினன். புரட்டுவன் தலையைப் பழி என ஒழிவன். 591