பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4722 கம்பன் கலை நிலை இப்பொழுதே உன் தலையைத் துணித்துக் தரையில் உருட்டு வேன்; அது பழி என்று இரங்கி அளி செய்து விடுத்துளேன்; உனது அழிவு எனது கருணையால் விலகியுளது என்று தனது பெருமித நிலைகள் யாவும் தெரிய உரை செய்து நிறுத்தினன். மன வேதனையோடும் மானக் கொதிப்போடும் இந்திர த்ெது பேசிய வார்த்தைகளை எல்லாம் வீடணன் அமைதியாய்க் கேட்டு கின்ருன். அவன் பேசி முடித்த பின் அவனே நேரே நோக்கி அதி விநயமாய் இவன் பேச நேர்ந்தான். உரைகள் உள்ளத்தின் பண்பாடுகளையும் உணர்வு நலன்களையும் உண்மை கிலைகளையும் தெள்ளத் தெளிய விளக்கி வந்தன. வீடணன் உரைத்தது. அவ்வுரை அமையக் கெட்ட வீடணன் அலங்கல் மெளலி செவ்விதின் துளக்கித் தன்பால் முறுவலும் தெரிவதாக்கி வெவ்விது பாவம் சாலத் தருமமே விழுமிது ஐய இவ்வுரை கேட்டி என்ன இனேயன விளம்பலுற்ருன். (1) அறம்துணை ஆவது அல்லால் அருகரகு அமைய கல்கும் மறம்துணை ஆக மாயாப் பழியொடும் வாழ மாட்டேன் : துறந்திலேன் மெய்ம்மை எய்தும் பொய்ம்மையே துறப்பதல்லால் பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின் அவன் பிழைத்த போதே. (2) உண்டிலன் நறவம் பொய்ம்மை உரைத்திலன் வலியால் ஒன்றும் கொண்டிலன் மாய வஞ்சம் குறித்திலன் யாரும் குற்றம் கண்டிலர் என்பால் உண்டே யிேரும் காண்டிர் அன்றே பெண்டிரின் திறம்பி னுரைத் துறந்தது பிழையிற் ருமே. (3) மூவகை உலகம் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன் தேவி கற்பினில் சிறந்துளாளே நோவன செய்தல் தீது என்றுரைப்ப துன்தாதை சீறிப் போவென உரைக்கப் போந்தேன் நரகதில் பொருந்துவேனே. வெம்மையில் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வியும் உம்மையே புகழும் பூண்க துறக்கமும் உமக்கே ஆக செம்மையில் பொருங்தி மேலோர் ஒழுக்கிைேடு அறத்தைத் தேறும் எம்மையே வழியும் பூண கரகமும் எமக்கே ஆக. (5) அறத்தினேப் பாவம் வெல்லாது என்னும தறிந்து ஞானத் திறத்தினது உறுமென்று எண்ணித் தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்