பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,724 கம்பன் கலை நிலை மதியால் என்னைப் பல பல இகழ்ந்து கூறினய், நம் குலம் அழிய சேர்ந்துள்ளதை நினைந்து கினைந்து நான் வருந்தி கொங் துள்ளது போல் யாரும் வருந்தி யிருக்கமாட்டார்; அழி துயரங் கள் யாவும் உன் கங்கையாலேயே வந்திருக்கின்றன; மகா பதி விரதையான சீதையை விரும்பாதே; அது கொடிய பாவம்; குடியை அடியோடு கெடுத்து விடும்; அவ் வுத்தமியை உரியவ. னிடம் சேர்த்து விடுவதே நல்லது என்று நான் எவ்வளவோ நீதிகளை எடுத்துச் சொல்லினேன்; யாதும் கேளாமல் என்னே எள்ளி வைது இலங்கையில் இராதே, வெளியே விரைந்து போப் விடு; போகாது கின்ருயேல் கொன்று தொலைத்து விடுவேன் என்று கொதித்துப் பேசினமையால் நான் வெளியேறி வங் தேன்; பழி பாவங்களோடு வாழ்வது அழி நரகமேயாம்; தருமமே உயிர்க்குத் துணை; அதனை இழந்து விடின் எவ்வளவு செல்வங்களை அடைந்திருந்தாலும் அவன் விரைந்து அழிக்கே போவான்; அறம் அமுதம், பாவம் நஞ்சு; நஞ்சைக் குடித்த வன் காசம் அடைவனே அன்றி நலமாய் வாழ முடியாது; குலக்கோடு அழிந்து போகலர்காது என்று பாட்டனும் நானும் பரிந்து உரைத்தோம்; உன் கங்கை சிங்கை தெளிந்து திருக்க வில்லை; நான் நெஞ்சம் நொந்து பிரிக்கேன்; புண்ணியமான எண்ணங்களோடே இளமை முதல் நான் பழகி வந்துள்ளேன்; பாவம் என்ருல் என் உள்ளம் பத.றுகிறது; பொப் புலை முதலிய இழி நிலைகளை நான் யாதும் அறியேன், மாய வஞ்சங்கள் தெரியா; எவ் வுயிர்க்கும் யாகோர் ஊறும் செய்யாமல் வாழ் வகே செவ்விய வாழ்வு என்று நன்கு தெளிந்திருக்கலால் அங்க வழியிலேயே எங்க வகையிலும் யான் ஒழுகி வந்துள்ளேன்; கரக துன்பங்களைத் தருகின்ற பாவத்தோடும் பாவிகளோடும் கான் கூடியிருக்க முடியாது, இராமன் புண்ணிய மூர்த்தி என்று எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்துகொண்டம்ை பால் அங்கத் தரும நாதன உரிமையோடு மருவியிருக்கிறேன்; இனிமேல் சுவர்க்கமோ, நர கமோ, எதுவரினும் எனக்கு இனிகே, கருமக்கையும் சக்தியக் கையும் எத்தகைய நிலையிலும் பேணி வருவதே எனது உயிர் வாழ்க்கையின் குறிக்கோள். உயர்வோ தாழ்வோ சுகமோ துக்கமோ எது வரினும் வருக’ என இன்னவாறு வீடணன் நன்னயமாக் கூறி நின்ருன்,