பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4725 உரைகளில் அரிய பல உறுதி நலன்கள் மருவியுள்ளன: யாவும் கருதி யுணரவுரியன. மானச மருமங்களும் மதிமாண்பு களும் சரித நிகழ்ச்சியில் தெரிய வருவது அரிய காட்சிகளாய் மருவி மிளிர்கின்றன. ஒருவனுடைய வாய்மொழி அவனது சீவிய நிலையை ஒவியமா வரைந்து ஒளி செய்து காட்டுகின்றது. பழி யொடும் வாழ மாட்டேன். வீடணனது விழுமிய மன நிலையையும் மனே வாழ்வையும் இது தெளிவா விளக்கி யுள்ளது. அரிய புகழுக்கு உரிய இனிய குண நீர்மைகளோடே இவன் பெருகி வந்துள்ளமை இதல்ை தெரிய வந்தது. குற்றம் குறைகள் யாதும் படியாமல் நல்ல நீதி கெறிகள் படிந்தே எவ்வழியும் இனிது வாழ்ந்து வந்திருக்கிருன். o பழிபட வந்த வாழ்வை விழைந்தாய் ! என்று முன் னம் இந்திரசித்து பழித்தான் ஆதலால் அதனை இங்கனம் மறுத்து மொழிக்கான். பழி இது, பாவம் இது, புகழ் இது, புண்ணியம் இது என்று தெளிவாகத் தெரியாமல் இளிவாய் மொழிகின் ருய்! என அவனது தெளிவின்மையை நன்கு தெளிய வுணர்த்தினன். புனிதமான இனிய புண்ணிய வாழ்வையே என்றும் நான் பேணி வருகிறேன்; இந்தத் தாய பழக்கத்தினலேதான் தீய பழக்கம் உள்ள உன் கங்கையை நான் வெறுத்து விலக நேர்க் கேன் என்று தினது பிரிவின் நிலையை அவன் அறிய விளக்கி ஞன். பிறப்பு நிலையில் ஒத்திருந்தாலும் சிறப்பு நீர்மையில் ஒவ் வாமையால் கமையனேடு அங்கே சேர்ந்திருக்க முடிய வில்லை. உண்டிலன் நறவம், பொய்ம்மை உரைத்திலன். தனது உணவின் அாப்மையையும் உரையின் வாய்மையை யும் இதல்ை உணர்த்தினன். நறவம்=கள், ப.து. மது மாமி சங்களைப் புசிப்பது இயற்கையான பழக்கமாக் கொண்டுள்ள அரக்கர் மரபில் பிறந்திருந்தும் இளமையிலிருந்தே வீடணன் அவற்றை விலக்கியிருக்கிருன். மது மதியை மயக்கும் இயல்பி னது; மாமிசம் சீவ இமிசையால் வருவது ஆகலால் அவை பழி உணவுகளாயின. இந்த இழிவுகளை விரும்பாதவர் விழுமியோரா யினர். புனிதமான நிலையினர் புண்ணியராய் மிளிர்கின்ருர்,