பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4380. கம்பன் கலை நிலை செடிது இரங்கி நேர்ந்ததை விசாரித்தான். சமரில் தான் பட்ட பாடுகளையெல்லாம் உள்ளம் திறந்து அவன் உரைக்க நேர்ந்தான். இந்திரன் விடையின் பாகன் எஅழ்வலிக் கலுழன் ஏறும் சுந்தான் அருக்கன் என்றித் தொடக்கத்தார் தொடர்ந்த போரில் கொங்திலன் இ&னயதொன்றும் நுவன் றிலன் மனிதன் நோன்மை மக்தாம் அனேய தோளாப்! வரம்புடைத் தன்று மன்னே. (1) இளையவன் தன்மை பீதால் இராமனது ஆற்றல் எண்ணின் தளையவிழ் அலங்கல் மார்ப நம்வயின் தங்கிற் றன்றல் விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றிமேல் விளையும் என்ன . உளேவதன்று என்னச் சொன்னன் உற்றுளது உணர்ந்தி லாதான். வென்றது. பாசத் தாலும் மாயையின் விளைவி லுைம் - - கொன்றது குர்க்கு வீரர் தம்மொடக் கொற்றத் தோனே ് கின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் என்றனன் அதனைக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னன். (3) - தனது தந்தையிடம் இந்திரசித்து இவ்வாறு பேசியிருக்கி முன். நேர்ந்துள்ள பகைவலியின் நிலைமையைக் குறித்து இத்தல்ை மகன் உளம் மறுகி உரையாடியுள்ள வகைகள் ஈண்டு ஊன்றி உணர வந்தன. நேரேகண்டு அனுபவித்தவன்விண்டுவிளக்கினன். "தந்தையே! இந்திரன் முதலிய பெரிய தேவர்களோடு எதிர்ந்து போராடியிருக்கிறேன்; எவரையும் எளிதே வென்று வந்துள்ளேன்; என்னேடு எதிர்ந்த வானவர் கானவர் எவரும் மானமழிந்து தோல்வியடைந்தே போயுள்ளனர். வில்லில் அதி: சய விரன் என்று உலகம் என்னைத் துதிசெய்து வர இதுவரை நான் இறுமாந்து வாழ்ந்து வந்தேன்; அந்த இறுமாப்பு:கேற்று நிலைகுலைந்துபோயது; என் கம்பியைக் கொன்று தொலைத்த, அந்த இராமன் கம்பியை அழித்து வானரங்களை அடியோடு, ஒழித்து வெற்றிமுடி சூடி விரைந்து மீளலாம் என்றே படைகள் புடைசூழ நெருகல் நான் போருக்குப் போனேன்; இளையவன். எதிர்ந்தான்; முனைந்து மூண்டு பொருதேன்; அவன் ஆற்றிய வில்லாடலின் விசித்திர நிலைகள் வியப்பை விளைத்தன; எல்லையில் லாதபடி அந்த வில்லிலிருந்து பகழிகள் வீறுகொண்டெழுந்தன. கரவேக சர்வேகங்களைக்காட்டி எவ்வளவோ எதிர்த்துப் போரா டினேன்; யாதொரு பயனும பெறவில்லை; எறிய தேர்கள் யாவும் சிதைந்தன; படைகள் பாழாயழிந்தன; எனது உடலில்