பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4881. பகழிகள் ஊடுருவிப்போயின; பொழுதட்ையும் வரையும் எனது. முழு வலியையும் செலுத்தி முயன்று பார்த்தேன்; ஒன்றும் முடியாமையால் வானில் விரைந்து மறைந்தேன்; இளையவன் முதலாக எதிரிகள் யாவரும் கீழே பராமுகமாயிருந்தனர். அந்த நிலையில் அனைவரையும் நாகபாசத்தால் வீழ்த்திப் பகழிகளைத் கொடுத்துப் படுகளப்படுத்தி வந்தேன்; மாய வஞ்சனையால் வென்று வந்தமையால் இதனை ஒரு உண்மையான வெற்றி என்று நாம் எண்ணலாகாது; இளையவன் நிலையே இவ்வாருயின் அதிசய விரகுண இரான இனி காம் எவ்வாறு வெல்ல்முடி யும்? யாவும் நன்கு ஆலோசனை செய்து மேல் ஆகவேண்டிய தை யூக விவேகமாய்த் தேர்ந்து கொள்ள வேண்டும்” என இன்னவாறு இந்திரசித்து உண்மைகளை ஒர்ந்து உரைத்தான். ' நிகழ்ந்தவா நிகழ்க என்றகளுல் அவின் உள்ளம் சலித்து உறுதி குன்றியுள்ளமை உணரவிந்தது. மூண்டிருக்கும் பகை நீண்டு நிற்கிறது; நாம் கருதியபடி எளிதே வென்றுகொள்ள முடியாது; கொடிய அவகேடு நேர்ந்துள்ளதாகவே தெரிய வரு கின்றது; கடந்தபடி நடக்கட்டும்;. நாம் கினைத்தபடி யாதும் நடைபெருது என்று மனம் உடைந்து பேசியிருக்கிருன். யாண்டும் தளராத அதிசயவீரன் ஈண்டு இவ்வாறு தளர்ந்து உளைந்து கூறியிருப்பது கால வேற்றுமையின் முடிவுகளைக் காட் டிகிற்கிறது. போரில் புகுந்து நேரில்" அனுபவித்த வந்திருக்கி ருன் ஆதலால் நிலைமைகளை நேர்மையோடு சொல்ல நேர்ந்தான். உற்று உள்ளது உணர்ந்தில்ாதான். இலக்குவன் முதலாயினேர் அங்கே பிழைத்து எழுந்துள்ள உண்மையை இங்கே இந்திரசித்து உணரவில்லை. தான் ஏவிய நாகபாசத்தால் யாவரும் மாண்டுபோயினர். இனி மீதமாப் நீண்டு நிற்பவன் இராமனே; அவனை வெல்லுவது அரித; ஒல்லு வதை உணர்க.எ ன்று தங்தையிடம் சிங்தை களர்ந்து சொன்னன். வென்றதுமாயையால், கின்றனன்.இராமன். -- நேர்மையாய்ப் பொருது வெல்லவில்லை; மாய வஞ்சனையி குலேயே வென்று வந்திருக்கிறேன்; இதனை வெற்றி என்று கருதலாகாது; இன்னும் கொற்றக் குரிசிலான இராமன் ஒரு