பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.382 கம்பன் கலை நிலை வன் நிற்கின்ருன் என்று இப்படிச் சொல்லியிருக்கலால் நாகபா சத்தால் மாண்டவர் மீண்டு எழுந்து வீறுகொண்டு நிற்கும் செய்தியை இவன் பாதும் அறியவில்லை என்பது தெரிய வந்தது. உற்றதை உணர்ந்திருந்தால் இந்த வெற்றியைக் குறித்துச் சொல்லியிருக்கமாட்டான்; உள்ளம் கலங்கியே யிருப்பான். இறந்து பட்டவர் எழுந்துள்ள நிலையைப் போர்க்களத்தி லிருந்து வருகிற ஆரவார ஒலிகள் அறிவிக்கின்றன; மாயத்தால் வென்றதும் கொன்றதும் பயனில்லாமல் போயின என்று தன் மகனிடம் இராவணன் உண்மையை உளைந்து உரைத்தான். - இந்திர சித்து வெற்றிபெற்று வங்கதை முதலில் கேட்ட பொழுது அங்கே போப் நேரே நிலைமையைப் பார்த்து வரும் படி இரண்டு ஒற்றரை இராவணன் அனுப்பியிருந்தான். அந்தத் அாதுவர் போர்க்களம் போப்ப் பார்த்துவிட்டு விரைந்து வந்து வேந்தனை வணங்கிநிகழ்ந்துள்ள உண்மைகளைநேரே உரைத்தார். அவருடைய உரைகள் இவன் உள்ளத்தைக் கலங்கச் செய்தன. தூதர் ஒதியது. பாசத்தால் பிணிப்புண் டாரைப் பகழியால் களப்பட் டாரைத் தேசத்தார் அரசன் மைந்தன் இடையிருள் சேர்ந்து கின்றே ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகெலாம் எரிப்பன் என்ருன் வாசத்தார் மாலை மார்ப! வானுறை கலுழன் வந்தான். அன்னவன் வரவு காணு அயில் எயிற்று அரவம் எல்லாம் சின்ன பின்னங்களான புண்ணுெடும் அயர்வு தீர்ந்தார் முன்னேயின் வலியர் ஆகி மொய்க்களம் நெருங்கி மொய்த்தார் இன்னது கிகழ்ந்தது என்ருர் அரக்கன்ஈது எடுத்துச்சொன்னன் எதிரிகள் அழிந்துபட்ட கிலையைத் தெளிந்து வரும்படி இராவணன் ஏவியிருந்த அாதுவர் மீண்டு வந்து இவ்வாறு விவ ரங்களைத் தெளிவாக விளக்கிச் சொன்னர். கருடன் வந்ததும், நாகபாசம் சின்னபின்னமாய்ச் சிதைக் துபோனதும், இறந்துபட்டவர் அனைவரும் விரைந்து எழுந்த அம் முன் இருந்ததைவிட இப்பொழுது அடலாண்மை மண்டி யாவரும் விரக்களிப்போடு வி.ற கொண்டு போராட மூண்டு பொங்கியுள்ள நிலையையும், அவர் கேரே கூறி முடித்தார்.