பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4384 கம்பன் கலை நிலை கொஞ்சமும் இரங்காமல் நெஞ்சம் துணிந்து மீண்டும் சண்டைக்குச் செல்லும்படி இப்படிச் சொல்விய அங்கத் தங்கை யை நோக்கி இந்திரசித்து மிகவும் பணிவோடு கூறிய மொழிகள் சிரியபண்பாடுகள் நிறைந்து வீரிய வினையங்களை விளக்கின. இன்ருெரு பொழுது தாழ்ந்துஎன் இகல்பெரும் சிரமம் நீங்கிச் சென்ருெரு கணத்தில் நாளே நான்முகன் படைத்த தெய்வ வென்றிவெம் படையிலுைன் மனத்துயர் மீட்பேன் என்ருன் நன்றென அரக்கன் போய்த்தன் களிமலர்க் கோயில் புக்கான். -- கன்ன உடனே போருக்குப் போகவேண்டும் என்று தாண்டிய தக்கையைப் பார்த்து இந்திரசித்து கூறியுள்ள உரை களை நோக்கி இங்கே நாம் உள்ளம் இரங்கி மறுகி வருந்துகி ருேம். செத்துப்போகாமல் தெய்வாதீனமாய்த் தப்பிப் பிழைத் திருக்கிருன். போரில் அல்லல் பல அடைந்து பகழிகள் பாய்ந்த புண்களோடு புண்பாடு படிந்துள்ளான்; எழுந்திருக்கவும் GP12யாமல் களர்ந்து கொந்து கவித்திருக்கின்ற வீர மகனை ஈரம் ஒரு சிறிதுமின்றி மீண்டும் சமருக்கு அனுப்பிய அத் தந்தையின் பேதைமையை நினைந்து கொந்தாலும் அதனை வெளிக்குக் காட் டாமல் அதி விநயமாய்ப் பதில் உரைத்திருக்கிருன்.

  • + இன்று ஒருபொழுது தாழ்ந்து இகல்பெரும் சிரமம் நீங்இ.

o என்ற கல்ை அன்று இந்திரசித்து இருந்த நிலையை அறிந்து கொள்கிருேம். முதல்நாள் மூண்ட போரில் கொடிய நெடிய துன்பங்களை அடைந்திருக்கிருன் ஆதலால் இகல்பெரும் சிரமம் எனத் தனது அவல நிலையைத் தெளிவாக நேரே குறித்தான். இன்று ஒருநாள் அவகாசம் கொடுங்கள்; தேகத்தில் சிர மங்கள் அதிகம் இருக்கின்றன; சிறிது ஆறுதல்செய்துகொண்டு நாளைக்குப் போகின்றேன் என்று வேகின்ற நெஞ்சோடு விளம் பியுள்ளான். வீரமகன் உரை வெய்ய துயரமாய் வெளிவந்துளது. தான் நொந்திருந்தாலும் எந்த வகையிலாவது தங்கையின் மனக்கவலையை நீக்கிவிடவேண்டும் என்று இம்மைந்தன் ஊக்கி உறுதி கொண்டுள்ளமை ஈண்டு உணர வந்தது. சிறந்த குல மகன்; உயர்ந்த வீரன்; பெற்ருேர்களிடம் பெருமதிப்புடைய வன்; பாண்டும் பணிவும் பண்பும் அணியாக அமைந்தவன்;