பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போவது புரிதிர் என்னப் புகறலும் பொருத தூதர்' தேவமற்று இவர்கள் செய்கைகேள் எனத் தெரியச் சொன்னர்: ஆனேயும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித் தானேகள் விய கின்ற தலைமகன் தனிமை ஓரார் மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்ருர் (2) முதல்நாள் கடந்த போரில் முறிபட்டுப்புறங்காட்டி மீண்டு ஓடிவந்தவர் என இந்த இருவரும் இங்கே தெரிய வந்தனர். 'அரசர் பெருமானே! இந்தச் சேனதிபதிகள் நேற்றுச் செய்த் செயல்கள் எங்களை நெஞ்சை வருத்துகின்றது; அரக்கர்குலத் துக்கே அவமானமான காரியத்தை இவர் ஆற்றியுள்ளனர்; போர்மேல் போன நால்வகைச் சேனைகளும் அழிந்துபட்டன; | o தன்னம் தனியே தங்கள் தலைமைத் திருமகளுர் தவித்து கின்ருர்; அந்த நிலையைப் பார்த்தும் நெஞ்சம் துணிந்து உதவாமல் இளை யவனது பானங்களைக் கண்டு நடுங்கி அஞ்சி ஒடி இலங்கை புகுந்தனர்; இன்று பெரிய போர்வீரர் போல் வந்து மகாராஜா எதிரே இப்படி விடைகேட்டு நிற்கின்ருர்’ என அவரது நிலைமை யைச் சொல்லவே இராவணன் சினந்து இகழ்ந்தான். போரில் புறங்காட்டி'ஓடிவருகிற இத்தகைய பேடிகளும் இந்த ஊரில் இருக்கிருர்களா? நன்று! நன்று நம் ஆட்சி நிலை! வெற்றி விரர் விளங்கியுள்ள குலத்தில் வீனக் கோழைகள் இருப்பது வெறுக் கத்தக்கது; இவரைப்பற்றிப் பிடித்து நாசிகளை அறுத்துப் போருக்கு அஞ்சிய பேடிகள் என்று பறை சாற்றி ஊரைச்சுற் |றிக்கொண்டு வந்து தெற்குக்கோட்டை வாசலில் நிறுத்தித் ఊడి) களை வெட்டி எறியுங்கள்" என்று வீரகம்பீரமாய் வெகுண்டு. -- உரைத்தான். அவனுடைய தண்டனை கொடுமையும் தீமையும் மடமையும் மண்டி எழுந்தன. அரசன் கூறிய இவ்வுரைகளைக் கேட்டதும் மல்லர்கள் விரைந்து அவரைப் பிடித்தனர்; கூரிய வாள்களை எடுத்து அவருடைய நாசிகளை அறுக்க மூண்டனர். அதுபொழுது மாலி என்பவன் தடுத்து நிறுத்தி அரசனை நோக்கி அடுத்துப் பேசினன். அவன் கூறிய உரைகள் பரிவும் பண்பும் தோய்ந்து அறிவு கலம் வாய்ந்து உறுதியுண்மைகளை உணர்த்தி, வந்தன. உற்ற சமையத்தில் உரைத்த மொழிகள் ஒளிகளாயின. of - -- அஞ்சமம் அஞ்சி அழிந்துள ராஞேர் வெஞ்சமம் வேறலும் வெனறியது இன்ருய்த் o *