பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4388 கம்பன் கலை நிலை நாசங்களை விளைத்து இலங்கை வேந்தன் இயற்றி வருகிற அவ லக்கேடுகளை எண்ணிக் கவலையோடு இருந்து வந்தவன் ஆக லால் சேனைத்தலைவர் இருவரை நாசிகளை : அவன் கூறியதைக் கேட்டதும் உள்ளம் வருந்தி ஊக்கித் துணிந்து இவ் வாறு பேசநேர்ந்தான். பேச்சு.அவனது மாட்சியை விளக்கியது.

    • * * மாலியின் மதிமொழி. * , ---

'அரசர்பெரும! கருணை சிறிதுமின்று இப்படிக் கடுங்கண் டம் இட்டது கொடிய அநீதியாம்; போருக்குப் போனவர் நேரே பொருது அங்கேயே மாண்டு படுவதும், மாளாமல் நின்று மீண்டு வருவதும் நீண்டகால இயல்புகளாய் நிலவி நிற் கின்றன; வெற்றியும் தோல்வியும் எவரிடமும் விரவி வருகின் றன; வென்றவர் தோற்பதும், தோற்றவர் வெல்வதும் உலக அனுபவங்களாயுள்ளன. தலைமையான போர்வீரரான தாங்கள் நிலைமைகளைநினைந்து சிந்திக்கவேண்டும். இந்திரன்,வருணன் முத லிய தேவர்களும் கோல்வியடைந்து மீண்டுள்ளனர்; காங்களும் முதல்நாள் போரில் இராமனேடு மூண்டு பொருது வெல்லமுடி யாமல் அல்லல் பல அடைந்து மீண்டு வந்திருக்கிறீர்கள்; அதி சய விரனை இந்திர சித்தும் சேற்று மீண்டு வந்திருக்கிருன்; து தனய் வந்தபோது அனுமான அஞ்சி ஒடிய அரக்கர்கள் எவ்வளவு கோடி! அத்தனை பேர்களும் இப்பொழுது படைக ளில் கலந்திருக்கின்றனர்; அவர்களுடைய நாசிகளையெல்லாம் அறுக்கவில்லை; இந்த இருவருடைய மூக்குகளை வெட்ட மூண் டது முறையா? நம் குடியில் பிறந்த ஒருத்தியை காசியை அறுத்து மூளியாக்கி அங்கபங்கம் செய்து அவமானப்படுத்தி விட்ட அந்த எதிரிகளை வெல்லமுடியாமல் அல்லலடைந்து நாம் அலமந்திருப்பதே நம் குலம் முழுவதும் நாசியை யிழந்து மானம் கெட்டு நீசமடைந்து நிற்பதுபோலாம்; இதனை யோசனை செய்து பார்க்கவில்லை; சீதையை விடாதவரையும் மானம் வீரம் புகழ் புண்ணியம் அறிவு திரு ஆற்றல் முதலிய எல்லா நலங்களையும் அடியோடு விட்டபடியாம்; குடிகேடு நேர்ந்து குலம் இழிந்து அரிய பல மேன்மைகளும் அழிந்துகொண்டுவருகின்றன; இந்த நாசவரவில் மேலும் யோசியாமல் நீசச்செயலைச் செய்யலா காது ஐயனே!” என்று அந்த முதியவன் மனம் துணிந்து மதி நலம் கூறி அரசை மறுத்திருப்பது அதிசயமாய் விளைந்துள்ளது.